எந்த சத்துக்களும் இன்றி ரசாயனங்கள் மட்டுமேயான வெள்ளைச் சர்க்கரை நம் உடலுக்குள்சென்றதும் குளோக்கோசாகவும் ப்ருக்டோசாகவும் பிரியும்.
குளுக்கோஸ் எளிதில் ஜீரணமாகும்.. ஆனால் ப்ரக்டோஸ் ஈரலால் மட்டுமே ஜீரணிக்க முடியும். ஈரலுக்கு அதிகப்படியான வேலை ஏற்ப்பட்டால் ஈரலில் கடுமையான அழுத்தம் உண்டாகி நம் உடலின் இன்ஸுலின் சுரப்பை பாதிக்கும்.
அதோடு, ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டு அதிகப்படியான உணவை உட்கொள்ளச் செய்யும். ஏற்கனவே ஜீரண மண்டலத்தை சிதைத்த சர்க்கரை ரசாயனம் அதிகமான உணவுகளை ஜீரணிக்காமல் கொழுப்பாக சேர்க்கும்.
வெள்ளச் சர்க்கரையில் உள்ள அளவுக்கு அதிகமான அமிலத்தன்மையால் உடல் சோர்வடையும் அதை சமன் செய்ய எலும்புகள் மற்றும் பற்களில் உள்ள
கால்சியம் சத்து உறிஞ்சப்படும். இதனால் பல் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வந்து சேரும்.
நம் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் உடலிலுள்ள பி.எச் எனப்படும் அமில மற்றும் கார நிலைகளின் சமன்பாட்டை வெகுவாக பாதிக்கும். பி.எச். சமன்பாட்டின் அதிகரிப்பால் நம் உடலின் அடிப்படை செல் அமைப்பே சீர்குலையும். இப்பிரச்சனை நம்மை மட்டுமின்றி நம் சந்ததியினருக்கும் உடல் உபாதைகள் தொடரும்.
மூளை சுறுசுறுப்புடன் செயல்பட மிகவும் அவசியமானது விட்டமின் A.அதிக வெள்ளைச் சர்க்கரை நம் உடலில் சேரும் போது அவை விட்டமின் A சத்தை உறிந்து விடுவதால் மூளையின் திறன் குறைகிறது. இதனால் ஞாபக மறதி, விரைவாக புரிந்து செயலாற்றுவதில் தாமதம் என பல பிரச்சனைகள் ஏற்படும்.
உடலிலுள்ள செல் உற்பத்தியை அதன் இயக்கத்தை சர்க்கரை சிதைப்பதால் அதன் சமநிலை சீர்குலைந்து புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
சேர்ந்து கொண்டேயிருக்கும் கொழுப்பு ரத்த ஓட்டத்தை பாதிப்பதோடு, ரத்த குழாய்களையும் பாதிக்கிறது. இதனால் மாரடைப்பு உட்பட இதய நோய்கள் ஏற்படும்.
பழ ஜூஸ் :
பழங்களை அப்படியே சாப்பிடுங்கள். முடியாத பட்சத்தில் அதில் சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம்.
கடைகளில் உணவுப் பொருள் வாங்கியதும் அதில் என்னென்ன சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை பாருங்கள் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் அதை தவிர்த்திடுங்கள். லேபிள்களில் சர்க்கரை என்று நேரடியாக இல்லாமல் வெவ்வேறு பெயர்களில் கூட அதனை குறிப்பிடப்படும், என்பதால் இனிப்பூட்டிகளின் பெயர்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்
நேரடியாக சர்க்கரையை எடுப்பதை விட நம்மையும் அறியாமல் மறைமுகமாக எடுக்கப்படும் சர்க்கரையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பிரட், பாஸ்தா போன்ற துரித உணவுகளில் எல்லாம் சர்க்கரையின் அளவே அதிகமாக இருக்கும். இப்படி நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவை கணக்கிடுங்கள்.
இவை எல்லாவற்றையும் விட காலை கண் விழித்ததும் பெட் காபி, 11 மணிக்கு ஒரு டீ என்று குடிப்பதை விடுத்து. சத்தான ஆகாரங்களை உணவுகளாக உட்கொள்ளுங்கள்.
நொறுக்குத்தீனிகளை தவிர்திடுங்கள்.
தாதுப்பொருட்கள் மற்றும் விட்டமின் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளையே அன்றாட உணவாக தேர்ந்தெடுங்கள்.
நிறையத் தண்ணீர் குடியுங்கள். அதே போல உடற்பயிற்சிகள் செய்வது, உங்களை சுறு சுறுப்பாக ஏதேனும் வேலையில் ஈடுப்படுத்திக் கொள்வது என எப்போதும் உற்சாகமாக இருங்கள்.