பருத்தித்துறையில் ஆரம்பப் பாடசாலையின் ஐந்தாம் தர மாணவர்களிடையே நேற்று முந்தினம் (26) புதன்கிழமை பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.
குறித்த விடைத்தாள்களை சக மாணவர்களை கொண்டு ஒருவர் மாறி ஒருவர் மூலம் திருத்தப்பட்டுள்ளது.
இதன் போது பல பிழையான விடைக்கு சரியென புள்ளி வழங்கியமை அவதானித்த ஆசிரியர் அவதானித்ததன் பிரகாரம் குறித்த மாணவியை தடியினால் கையில் அடித்துள்ளார்.
இதற்காகவே நேற்றிரவு ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இன்று பருத்தித்துறை நீதிமன்றில் முற்படும்தப்படவுள்ளார்.