Vavuniya Newsவவுனியாவில் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியினை கழுத்தை பிடித்து இழுத்து...

வவுனியாவில் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியினை கழுத்தை பிடித்து இழுத்து முச்சக்கரவண்டியில் ஏற்றிய போக்குவரத்து பொலிஸார்

-

- Advertisment -spot_img

வவுனியா குருமன்காட்டு சந்தியில் இன்று (12.04) காலை வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியினை தலையை பிடித்து இழுத்து கையை பிடித்து அமுக்கி முச்சக்கரவண்டியில் ஏற்ற முற்பட்டமையினால் அவ்விடத்தில் சற்று பதட்ட நிலமை காணப்பட்டது

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வாகன சாரதியோருவர் வர்த்தக நோக்கத்திற்காக குருமன்காட்டு சந்தியில் வாகனத்தினை நிறுத்தியுள்ளார். இதன் போது வாகனத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளார்.

எனினும் வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை இறக்குவதினால் சிறிது நேரம் கால அவகாசம் தருமாறு வாகன சாரதி கோரிய சமயத்தில் போக்குவரத்து பொலிஸார் வாகன திறப்பினை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்

இதன் போது வாகனத்தினை நிறுத்த தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தினை நிறுத்தியமை என சிங்கள மொழியில் பொலிஸார் தண்டப்பத்திரம் வழங்கிய சமயத்தில் தமக்கு என்ன குற்றம் என தெளிவில்லை எனவே தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரியமையினால் வாகன சாரதி – போக்குவரத்து பொலிஸாருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொருப்பதிகாரி கடமைக்கு இடையூறு என தெரிவித்து குறித்த வாகன சாரதியினை முச்சக்கரவண்டியில் பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றி செல்ல முற்பட்ட சமயத்தில் அவ்விடத்தில் பதட்ட நிலமை ஏற்பட்டது.

எந்த தவறும் செய்யாது என்னை எவ்வாறு கைது செய்ய முடியும் மேலும் அவ்வாறு தவறு செய்தால் தண்டப்பத்திரம் தானே வழங்க வேண்டும் என வாகன சாரதி கூறி வாகன சாரதி முச்சக்கரவண்டியில் ஏற மறுப்பு தெரிவித்தமையடுத்து போக்குவரத்து பொலிஸார் குறித்த வாகன சாரதியினை தலையை பிடித்து இழுத்து கையை பிடித்து அமுக்கி முச்சக்கரவண்டியில் ஏற்றி வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச்சென்றனர்.

வாகன சாரதி மீது வவுனியா போக்குவரத்து பொலிஸார் வழக்கு தாக்கல் மேற்கொண்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest news

தந்தை செலுத்திய டிப்பருக்குள் சிக்கி வீட்டு முற்றத்திலே ஒன்றரை வயது குழந்தை பலி – கிளிநொச்சியில் சோகம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் இன்று (18) பிற்பகல் 5.15...

யாழில் காதலன் இறந்த செய்தி கேட்டு காதலியும் மரணம்!!

தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று (17) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. குளத்தில் தாமரைபூ பறித்த போது அவர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. அந்த...

வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் ஒரு தொகை போதைபொருளுடன் சந்தேக நபர் கைது..!

யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் ஒரு தொகை போதை பொருளுடன் இன்று (8)அதிகாலை கடற்படையால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்...

கட்டுநாயக்கா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு!

கட்டுநாயக்காவில் இன்று (08) மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். 51 வயதுடைய சீதுவை பகுதியைச் சேர்ந்தவர் ஒருவரே உயிரிழந்துள்ளார். காயமடைந்த நபர்...
- Advertisement -spot_imgspot_img

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் பெண் ஒருவரை கொடூரமாகத் தாக்கி விட்டு தலைமறைவான நபர் கைது.

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவற்குட்பட்ட சின்னசாளம்பன் பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கிவிட்டு தலைமறைவான நபரை உடனடியாக கைதுசெய்யவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 03.04.2025இன்று...

இந்த உண்மை எல்லாம் தெரிஞ்சா, இனிமேல் நீங்க வெள்ளை சர்க்கரை யூஸ் பண்ணவே மாட்டீங்க!

எந்த சத்துக்களும் இன்றி ரசாயனங்கள் மட்டுமேயான வெள்ளைச் சர்க்கரை நம் உடலுக்குள்சென்றதும் குளோக்கோசாகவும் ப்ருக்டோசாகவும் பிரியும். குளுக்கோஸ் எளிதில் ஜீரணமாகும்.. ஆனால் ப்ரக்டோஸ் ஈரலால் மட்டுமே ஜீரணிக்க...

Must read

தந்தை செலுத்திய டிப்பருக்குள் சிக்கி வீட்டு முற்றத்திலே ஒன்றரை வயது குழந்தை பலி – கிளிநொச்சியில் சோகம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை...

யாழில் காதலன் இறந்த செய்தி கேட்டு காதலியும் மரணம்!!

தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று (17) இளைஞன்...
- Advertisement -spot_imgspot_img

You might also likeRELATED
Recommended to you