பொதுவாக பச்சைப்பட்டாணியில் வைட்டமின் ஏ, ஈ, டி, சி மற்றும் வைட்டமின் கே உள்ளன. இதில் கோலின், பாந்தோதெனிக் அமிலம் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற கலவைகள் உள்ளன.

அதுமட்டுமின்றி அமினோ அமிலங்கள், புரதம் மற்றும் கொழுப்பு அமிலங்களுடன் உணவு நார்ச்சத்துக்கள் சர்க்கரையை உள்ளடக்கிய கார்போஹைட்ரேட்டுகள் அதிக அளவில் உள்ளன.
பச்சைப்பட்டாணி நன்மை பயக்ககூடியது. ஆனால் அளவுக்கு அதிகமாக எடுத்தால் இந்த பக்கவிளைவுகள் உண்டாகலாம். தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- பச்சைப்பட்டாணி காயங்கள் குணமடைய அதிக நேரம் எடுக்கும். திசுக்கள் தங்களை தாங்களே சரி செய்வதற்கு அதிக நேரம் எடுக்கும். இது இரத்த இழப்பை உண்டாக்கலாம். வயிறு ரிப்ளக்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்கள் அல்லது வயிற்றுப்புண்கள் உள்ளவர்களால் பயன்படுத்த கூடாது.கீல்வாதம் உண்டாகலாம் .
- பச்சைப்பட்டாணியின் அதிகப்படியான எடுத்து கொண்டால் உங்கள் உடலில் கால்சியம் இழப்பு மற்றும் யூரிக் அமிலத்தின் அதிகப்படியான உருவாக்கத்துக்கு வழிவகுக்கும். இது கீல்வாதத்தை உண்டாக்கும்.
- பச்சைப்பட்டாணியில் ஃபைடிக் அமிலம் மற்றும் லெக்டின்கள் போன்ற ஆன் டி நியுட்ரியன்கள் உள்ளன. அவை ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை தடுக்கின்றன. இது செரிமான பிரச்சனைகளை தூண்டலாம்.
- பச்சைப்பட்டாணியின் மற்றொரு பக்கவிளைவு எடை அதிகரிப்பு. இதை அதிகமாக எடுக்கும் போது கொழுப்பை அதிகரிக்கும். அளவாக எடுக்கும் போது நன்மைபயக்க கூடியது. ஆனால் அதிகமாக எடுக்கும் போது எடை அதிகரிப்பு தூண்டப்படுகிறது.
- பச்சைப்பட்டாணி முக்கியமாக கார்போ ஹைட்ரேட்டுகளை உள்ளடக்கியது. இந்த பருப்பில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் கொண்டுள்ளதால் இது வீக்கம் மற்றும் அதிகப்படியான வாயு போன்ற குடல் அசெளகரியத்தை தூண்டுகிறது.