Tuesday, March 21, 2023
HomeStickerஉங்கள் WhatsApp-ல் உள்ள பெயரை மறைப்பது எப்படி? வாங்க பார்க்கலாம்

உங்கள் WhatsApp-ல் உள்ள பெயரை மறைப்பது எப்படி? வாங்க பார்க்கலாம்

WhatsApp-ல் உங்களுக்கு தெரியாத, அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து உங்களுடைய பெயரை மறைப்பதற்கான ஆப்ஷனை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Facebook என்று அறியப்பட்டிருந்த, தற்போது Meta என்று பெயர் மாற்றம் பெற்றிருக்கும் தலைமை நிறுவனத்தின் துணை நிறுவனங்களுள் ஒன்று தான் WhatsApp.

கோடிக்கணக்கானவர்கள், உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுத்தி வரும் இந்த மெசேஜிங் ஆப்பில், மிகப்பெரிய அளவுக்கு பண மோசடிகள் நடந்து வருகிறது. அவ்வப்போது செயலியின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு, பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு பல்வேறு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

WhatsApp செய்திகள், உங்கள் சாட் என்று அனைத்துமே என்க்ரிப்ட் செய்யப்பட்டு பாதுகாப்பாக இருக்கின்றன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் தற்போது WhatsApp செயலியில் பயனர்கள் பயன்படுத்தும் புரொஃபைல் போட்டோ (Profile Photo), ஸ்டேட்டஸ் (Status), லாஸ்ட் ஸீன் ஸ்டேட்டஸ் (Last Seen Status) மறைப்பது, மற்றும் இதர விவரங்களை அவர்களுக்கு முன்பின் தெரியாத நபர்கள் பார்க்க முடியாதபடி பாதுகாப்பாக மாற்றுவதற்காக சில அப்டேட்களை செய்யப் போவதாக WhatsAppசெயலியின் தலைமை நிறுவனமான Meta அறிவித்தது.

மேலும், ஒரு சில பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்த வேண்டிய அளவுக்கு ஓன்லைன் ஹேக்கிங் மற்றும் அச்சுறுத்தல் இருக்கின்றன.

உங்களுக்கு தெரியாத, அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து உங்களுடைய WhatsApp கணக்கின் பெயரை மறைப்பதற்காக, WhatsApp கணக்கின் பெயர் இருக்கும் இடத்தை வெற்றிடமாக மாற்றக்கூடிய ஆப்ஷனை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட நபர்களிடம் இருந்து உங்கள் வாட்ஸ்அப் கணக்கின் பெயரை மறைப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

  • உங்கள் WhatsApp கணக்கைத் திறந்து, திரையின் வலது மேல்பக்கத்தில் இருக்கும் மூன்று புள்ளிகள் மீது டாப் செய்து செட்டிங்ஸ் (settings) பகுதிக்குச் செல்லவும். அடுத்ததாக, (⇨) சின்னத்தை நகல் எடுக்கவும்.
  • வாட்ஸ்அப் கணக்கில் உங்கள் பெயருக்கு முன்னே இருக்கும் பென்சில் (pencil) சின்னத்தின் மீது டாப் செய்து, நகல் எடுத்த அம்புக்குறி சின்னத்தை உங்களின் தற்போதைய பெயர் இருக்கும் இடத்தில் ‘paste’ செய்யுங்கள்.
  • பின்னர், உங்கள் பெயரை மாற்ற அம்புக்குறி சின்னத்தை நீக்கி, OK என்ற பட்டனைக் கிளிக் செய்து. OK வைக் கிளிக் செய்த பிறகு, வாட்ஸ்அப் கணக்கில் உங்கள் பெயர் இருக்கும் இடம் வெறுமையாக (blank) இருக்கும்.
  • உங்கள் பெயரை அல்லது பெயர் இருக்கும் இடத்தை முழுமையாக வெற்றிடமாக வைக்க விரும்பவில்லை என்றால், நீங்கள் (,), (-), (;), உள்ளிட்ட ஸ்பெஷல் கேரக்டர்களை பயன்படுத்தலாம். ஆனால், ரேண்டம் யூசர்களுக்கு, உங்கள் பெயர் இருக்கும் இடத்தில் முற்றுப்புள்ளி (.) தான் தெரியும்.
  • உங்கள் மொபைல் எண்ணை வேறு யாரேனும் தங்கள் மொபைலில் சேமித்து வைத்திருந்தலும், அவர்கள் என்ன பெயரில் உங்கள் எண்ணை சேமித்து வைத்துள்ளார்களோ, உங்கள் வாட்ஸ்அப் கணக்கு அந்தப்பெயரில் தெரியும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments