பாணந்துறையில் உள்ள உணவகம் மற்றும் விடுதி ஒன்றில் திருமண வைபவம் ஒன்றில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று கொரகன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிஷான் லக்ஷான் ஜயரத்ன (24) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அந்த இளைஞன் தன் நண்பனின் திருமணத்தில் கலந்து கொண்டான். மற்றொரு நண்பருடன் நடனமாடிக்கொண்டிருந்த அவர் திடீரென சுயநினைவை இழந்தார்.
படுகாயமடைந்த அவர் பாணந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இறந்தவர்களுக்கு PCR பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிரேத பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.