கடகம்

உங்களின் தான் என்ற குணம் உஙக்ளின் வாழ்க்கையில் உள்ள அனைவரின் மகிழ்ச்சிக்கும் உங்களை காரணமாக உணரவைக்கும். ஆனால் உங்கள் வாழ்க்கையில் உள்ள யாரேனும் அவர்களின் சூழ்நிலையால் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் உங்களுடன் அவர்களுக்கு தொடர்பு உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் குற்ற உணர்வு கொள்வீர்கள். உங்களின் குற்ற உணர்ச்சியால் உங்களை நீங்களே துன்புறுத்த தொடங்கிவிடுவீர்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக உங்களின் குற்ற உணர்ச்சி குறிப்பிட்ட காலம் வரைதான் நீடிக்கும். அதிக அளவு குற்ற உணர்வுக்கு நீங்கள் ஆளானாலும் அதனை விட்டு எப்போது வெளிவர வேண்டும் என்று உங்களுக்கு நன்கு தெரியும்.
கன்னி
இந்த உலகத்தில் நாம்தான் கோழையாக இருக்கிறோம் என்ற உணர்வு உங்களுக்கு இருந்தால் நீங்கள் கன்னி ராசியாக இருக்க வாய்ப்புள்ளது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் நினைத்து உங்களை துன்புறுத்திக் கொள்வதில் உங்களுக்கு இணை நீங்கள் மட்டுமே. உலகத்தை பற்றிய பல விஷயங்கள் எப்பொழுதும் உங்கள் மூளையில் ஓடிக்கொண்டு இருக்கும். எனவே அதிகமாக சிந்திப்பதுதான் உங்களின் மிகப்பெரிய பிரச்சினை . சிலசமயம் உங்களை சுற்றி ஏதாவது குழப்பம் ஏற்பட்டால் நீங்கள் பழி முழுவதையும் உங்கள் மேல் சுமத்திக் கொள்வீர்கள். குற்ற உணர்ச்சியில் சிக்கித் தவிக்கும் நீங்கள், பழியை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பீர்கள், அதற்கு பிறகுதான் உங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சி எடுப்பீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் அளவிற்கு குற்ற உணர்ச்சி கொண்டவர்கள் வேறு யாருமில்லை. உங்கள் வாழ்க்கை நீங்கள் நினைத்தது போலவும், உங்கள் திட்டங்கள் சரியாக செயல்படும்போதும் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். விஷயங்கள் தோல்வியடையும் போது, நீங்கள் விரக்தியில் மூழ்கிவிடுவீர்கள். திட்டங்கள் தோற்கும் போது நீங்கள் குற்ற உணர்வை தேடி செல்வீர்கள், அதனை மனதார ஏற்றுக்கொள்வீர்கள். அனைத்து தோல்விக்கும் நீங்கள்தான் காரணம், நீங்கள் மட்டும்தான் காரணம் என்ற எண்ணம் உங்களை விட்டு எப்போதும் அகலாது.
விருச்சிகம்
குற்ற உணர்வுதான் உங்களைத் தூண்டுகிறது, இதுதான் உங்களின் இருளான மற்றும் ஆழமான ரகசியமாகும். நீங்கள் “குற்ற இன்பம்” என்ற சொற்றொடரை உருவாக்குகிறீர்கள், ஏனென்றால் நீங்கள் செய்யும் அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த அனைத்து பயங்கரமான விஷயங்களையும் சமாளிக்க உதவும். நீங்கள் ஒருவரை உங்களின் தண்டிக்கிறீர்கள் என்றால் அது உங்களின் பழைய குற்ற உணர்ச்சியில் இருந்து வெளிவருவதற்காக செய்வதாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அதிக குற்ற உணர்வைக் கொண்டவர்கள், ஆனால் அது சில விஷயங்களில் மட்டும்தான் இருக்கும். மிகப்பெரிய தவறுகளை சாதரணமாக எடுத்துக் கொள்வதும், சிறிய விஷயங்களுக்காக குற்ற உணர்வில் வாடுவதும் இவர்களின் வழக்கமாகும். சிறிய விஷயங்களுக்காக நீங்கள் அதிக வருத்தப்படுவது அனைவருக்கும் விசித்திரமானதாக தோன்றலாம். ஆனால் மற்றவர்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்துவது, முக்கியமான உறவுகளை காயப்படுத்துவது போன்றவற்றிற்கு நீங்கள் வருத்தப்படாமல் இருப்பது பிறருக்கு அதிர்ச்சியாக இருக்கும்.