நம்மில் சிலருக்கு மூக்கிற்கு மேலே சொரசொரப்பாகவும், கருமையான புள்ளிகளாகவும் இருக்கும். அதிலும் மூக்கிற்கு பக்கவாட்டில் அத்தகைய கரும்புள்ளிகளால், அவ்விடமே கருமையாகவும், அசிங்கமாகவும் காணப்படும்.

அதற்கு கடைகளில் விற்கப்படும் ஸ்கரப்களை வாங்கி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு இதனை சரி செய்ய முடியும்.
தற்போது கரும்புள்ளியை எப்படி எளியமுறையில் போக்கலாம் என்று இங்கே பார்ப்போம்.
- பேக்கிங் சோடாவில் இலேசாக தண்ணீர் விட்டு குழைத்து மென்மையாக குழைத்து குளிர்ந்த நீரில் கழுவி விடவும். வாரத்தில் இரண்டு முறைக்கு மேல் இதை பயன்படுத்த வேண்டாம்.
- முகத்துக்கு நீராவி காட்டுவது சருமத்தில் வியர்வையை தொடங்குகிறது. இதனால் துளைகள் மென்மையாக்குகிறது. இது உள்ளே இருந்து நச்சுகளை அகற்ற வழிவகுக்கிறது.
- இலவங்கப்பட்டையை தேனுடன் கலந்து பயன்படுத்தினால் சக்தி வாய்ந்ததாக மாறும். 1:3 என்னும் விகிதத்தில் இலவங்கபட்டை தூள் மற்றும் தேனை பயன்படுத்தி கெட்டியான பேஸ்ட்டை உருவககி பகுதியில் மெதுவாக தடவி வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். இது கரும்புள்ளிகளை காணாமல் போக செய்யும்.
- எலுமிச்சை அமிலத்தன்மை கொண்டவை. இது மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகளை விரைவாக நீக்கும் சிறந்த வீட்டு வைத்தியம் ஆகும்.
- ப்ளாக்ஹெட்ஸ் மீது தண்ணீரில் கலந்த ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுத்தவும். பிறகு 20 விநாடிகள் கழித்து மூக்கை தண்ணீரில் கழுவவும். வாரம் ஒருமுறை செய்து வந்தால் கரும்புள்ளிகளை நீக்கலாம்.
- தேயிலை மர எண்ணெய், ஜோஜோபா எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய் மற்றும் லாவெண்டர் எண்ணெய் ஆகியவை சருமத்தின் வீக்கத்தை குறைக்கின்றன. இது தோலின் துளைகளை சுத்தபடுத்துகின்றன. மேலும் இது ப்ளாக்ஹெட்ஸ் குணப்படுத்தும்.