இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா 149 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. பந்துவீச்சில் இலங்கை சார்பாக வனிது ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும், சமிக்க, பினுர, சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் ஹசில்வுட் 4 விக்கெட்டுக்களையும், அடம் சம்பா 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.