Tuesday, March 21, 2023
HomeStickerஉங்கள் Smartphone தொலைந்து விட்டதா? உடனே செய்யவேண்டியது என்ன தெரியுமா?

உங்கள் Smartphone தொலைந்து விட்டதா? உடனே செய்யவேண்டியது என்ன தெரியுமா?

உங்கள் ஸ்மார்ட் ஃபோன் திருடப்பட்டால், உடனடியாக உங்கள் பேங்க் அக்கவுண்ட் விவரங்கள் மற்றும் பரிவர்த்தனை விவரங்களை நீங்கள் பாதுகாப்பது அவசியம்.

உங்கள் ஃபோன் தொலைந்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்…

முதலில், உங்கள் சிம் கார்டை பிளாக் செய்யவேண்டும்:

உங்கள் மொபைலை திருடியவன் உங்கள் ஃபோன் நம்பரை தவறாக பயன்படுத்தாமல் இருக்க, உங்கள் சிம் கார்டை பிளாக் செய்வது என்பது முதல் மற்றும் முக்கிய படியாகும்.

சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு சேவை வழங்குநரின் கஸ்டமர் கேரை அழைத்து மொபைல் திருட்டு குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவித்து உங்கள் மொபைல் நம்பரை டீஆக்டிவேட் செய்ய சொல்லுங்கள்.

சிம் கார்டை பிளாக் செய்வது OTP-க்கள் மூலம் அணுக கூடிய மொபைலில் உள்ள UPI/பேமென்ட் ஆப்ஸ் உட்பட ஒவ்வொரு ஆப்ஸையும் திருடன் பயன்படுத்துவதை தடுக்கும்.

இதற்கு சிறிது நேரம் ஆனாலும் உங்கள் பிரைவசி மற்றும் மொபைல் வாலட்கள் பாதுகாக்கப்படும்.

அடுத்தது உங்களது UPI பேமென்ட்டை டீஆக்டிவேட் செய்ய வேண்டும்:

உங்கள் ஃபோனை கண்டுபிடிக்க தாமதமானால் UPI பேமென்ட்டை டீஆக்டிவேட் செய்யவும். ஏனென்றால் உங்கள் மொபைலை திருடியவன் முக்கிய அம்சமான UPI பேமேன்டை பயன்படுத்த முயற்சிக்கலாம். இதனால் நீங்கள் பெரிய அளவிலான நிதி இழப்பை சந்திக்கலாம். எனவே ஒரு சிறிய தாமதம் உங்களுக்கு அதிக இழப்பை ஏற்படுத்தலாம்.

எல்லா மொபைல் வாலட்களையும் பிளாக் செய்யவும்:

Amazon Pay, Google Pay, PhonePay, FreeCharge மற்றும் Paytm போன்ற இ-வாலட்டுகள் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளன. ஆனால் உங்கள் மொபைல் தவறான கைகளுக்கு சென்றால் அதிக விலை கொடுக்க நேரிடும்.

ஃபோன் காணாமல் போன உடனேயே சம்பந்தப்பட்ட ஆப்ஸின் ஹெல்ப் சென்டரை தொடர்பு கொண்டு நீங்கள் மீண்டும் வாலட்களை செட்டப் செய்யும் வரை அக்ஸஸை தடுக்கும்படி அவர்களிடம் கேட்டு கொள்ளுங்கள்.

காவல்துறையை அணுகுங்கள்:

மொபைல் தொலைந்தால் நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று உங்கள் அருகில் உள்ள பொலிஸ் ஸ்டேஷன் சென்று திருட்டு புகாரை பதிவு செய்யுங்கள். மேலும் FIR காப்பியை கேளுங்கள்.

உங்கள் மொபைல் தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது உங்கள் பணம் திருடப்பட்டாலோ அவற்றை ஆதாரமாக பயன்படுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments