Sunday, May 28, 2023
HomeStickerமூக்கின் மேல் படியும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்க வேண்டுமா? இதோ அசத்தலான டிப்ஸ்

மூக்கின் மேல் படியும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்க வேண்டுமா? இதோ அசத்தலான டிப்ஸ்

பொதுவாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு மூக்கில் தான் அதிகப்படியான எண்ணெய் பசை இருக்கும்.

இதனால் மூக்கின் மீதும் முக்கை சுற்றிலும் கரும்புள்ளிகள், பருக்கள், அழுக்கு, போன்றவை படிந்திருப்பதை காணலாம். இதனால் ஒட்டுமொத்த முகத்தின் அழகும் சீர்குலைந்து போகும்.

மூக்கின் மேல் படியும் எண்ணெய் பசையை நீக்க இயற்கையாக கிடைக்கும் சில பொருட்கள் கைகொடுக்கும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • எண்ணெய் சருமம் கொண்டவர்கள் எலுமிச்சை சாற்றை காட்டன் பஞ்சில் நனைத்து மூக்கின் மீது தடவில் 15 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவுவது நல்ல பலனைக் கொடுக்கும்.
  • சிறிதளவு தேனை மூக்கில் தடவி நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இதனை தினமும் இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இது மூக்கில் எண்ணெய் சேருவதை தடுப்பதோடு, அதை எண்ணெய் இல்லாமல் பராமரிக்க உதவுகிறது.
  • . தயிர் உடன் சிறிதளவு தக்காளி சாறு கலந்து எண்ணெய் பசையுள்ள மூக்கின் மீது தடவுவது நல்ல பலன் கிடைக்க உதவும்.  இது சரும துளைகளில் உள்ள அழுக்கை நீக்குவதோடு, சரும புள்ளிகள் மற்றும் தழும்புகளை குறைக்க உதவுகிறது.
  • 3 முதல் 4 டீஸ்பூன் வினிகரை அரை கப் தண்ணீருடன் சேர்த்து, மூக்கின் மீது தடவி 15 நிமிடங்கள் விடவும். அதன் பின்னர் வெது வெதுப்பான நீரில் கழுவவும். இது மூக்கின் மீதான எண்ணெய் பசையை மட்டுமின்றி கரும்புள்ளிகளையும் நீக்க உதவுகிறது.
  •  சந்தன தூள் அல்லது பவுடரை நீரில் கலந்து, அந்த பேஸ்ட்டை மூக்கின் மீது தடவி 15 நிமிடங்கள் காத்திருங்கள். பின்னர் அதனை குளிர்ந்த நீரில் கழுவு வேண்டும். இதனால் மூக்கின் மீதுள்ள அதிகப்படியான எண்ணெய் பசை அகற்றப்படும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments