நம்மில் பலருக்கும் அழகை கெடுக்கும் பெரும் பிரச்சனையாக முகப்பருக்களின் அடுத்த நிலையே கரும்புள்ளிகளே உள்ளது.

மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகள் இலகுவில் மறைவதில்லை.
அவ்வாறு மறைவதாக இருந்தாலும் சிலவேளைகளில் மீண்டும் மீண்டும் தோன்றுவதாகவே இருக்கும்.
இதனை ஒரு சில எளிய வழிகள் மூலம் போக்க முடியும். தற்போது அவை எப்படி என பார்ப்போம்.
- ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் அரை ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து மூக்கின் மீது அப்ளை செய்து 15 நிமிடங்கள் வரை நன்கு உலர விடுங்கள். நன்கு காய்ந்ததும் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவினால் மூக்கின் மேலுள்ள கரும்புள்ளிகள், பருக்கள் அனைத்தும் ஓரிரு முறை செய்யும்போதே குறையத் தொடங்கும்.
- 2 ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன் 3 ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து பேஸ்ட்டாக்கி மூக்கு மற்றும் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் அப்ளை செய்து நன்கு ஸ்கிரப் செய்ய வேண்டும். வாரத்திற்கு இரண்டு நாட்கள் வரை இதை பயன்படுத்தி வந்தால் மிக வேகமாக கரும்புள்ளிகள் குறையும்.
- மூன்று ஸ்பூன் ஜோஜோபா எண்ணெயுடன் 4 ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஜோஜோபா ஆயிலுக்கு பதிலாக ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயில் சேர்த்துக் கொள்ளலாம். இதை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் ஸ்கிரப் செய்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை வாரத்துக்கு இரண்டு நாட்கள் செய்யலாம்.
- முட்டையின் வெள்ளைக்கருவைப் பிரித்தெடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த எலுமிச்சை சாறு முட்டையுடன் நன்கு சேரும்படி கலந்து கொண்டு, அதை மூக்கின் மேற்பகுதி மற்றும் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் அப்ளை செய்ய வேண்டும். இதை அப்படியே 15-20 நிமிடங்கள் வரை விட்டுவிட்டு பின் தண்ணீரால் நன்கு கழுவுங்கள். H