Sunday, May 28, 2023
HomeStickerகர்ப்பிணித் தாய்மார் மற்றும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல்!

கர்ப்பிணித் தாய்மார் மற்றும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல்!

நாட்டில் திரிபோஷா உற்பத்தியை மீள ஆரம்பிப்பதற்கான உதவிகளை வழங்க உலக உணவுத் திட்டம் (WFP) இணங்கியுள்ளது.இது தொடர்பில் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.


அதன்படி, மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக முன்னர் நிறுத்தப்பட்ட திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

நாட்டிலுள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து நிரப்பியாக திரிபோஷா இலவசமாக அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments