முல்லைத்தீவு – விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்களை இராணுவம் தாக்கியதாகவும், பதிலுக்கு இராணுவத்தினரை மக்கள் தாக்கியதாகவும் அறியமுடிகிறது.
குறித்த பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்ட நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.