இலங்கையர்களின் செயல் ஒரே நாளில் உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவிக்கும் சுலோகங்களை ஏந்தி இலங்கையர்கள் வௌிக்காட்டிய நன்றியுணர்வே சர்வதேசத்தின் பேசுபொருளாக மாறியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி நாட்டுக்கு வந்தமைக்கு இலங்கை அணி ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய அணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மஞ்சள் ஆடை அணிந்து, நேற்றைய தினம் கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு சென்றிருந்தனர்.

இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியிலும் இலங்கை மக்களின் நன்றியுணர்வை சர்வதேச ஊடகங்கள் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் சர்வதேசத்துடன் இணைந்து செல்ல நாம் மேற்கொள்ளும் முயற்சியில் நூறில் ஒரு பங்காக இது உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
அதேசமயம் இதேபோன்று உள்நாட்டில் சக இனங்களுடன் சேர்ந்து வாழ முயற்சித்தோமானால் சர்வதேச உதவிகள், உள்நாட்டின் ஒற்றுமை என்பன ஒன்றிணைந்து நம் நாட்டை விரைவில் மீண்டும் அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லும் என துறைசார் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.