அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் நேற்று (29) வெளியிடப்பட்டுள்ளது.
22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
22 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அடிப்படைச் சட்டமூலத்திற்கு கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அதற்கமைய, சட்ட வரைஞரால் இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்தம் தயாரிக்கப்பட்டது.
இதன்படி, 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் முழுமையான விபரங்களை வாசிக்க இந்த லிங்கை அழுத்துங்கள்
Thank you for providing these details. 15464691