விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நெற்பயிர் செய்கையை மேற்கொள்வதற்காக விவசாயிகள் பெற்றுக் கொண்ட கடனைத் தள்ளுபடி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவை கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நியமிக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நேற்று அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவின் கட்டமைப்பும் வெளியிடப்பட்டுள்ளது.