பாதரசத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்றை இலங்கையர் ஒருவர் கண்டுபிடித்து மின்சார நெருக்கடிக்கு தீர்வு வழங்க முன்வந்துள்ளார்.
கம்பளை தொழுவ பிரதேசத்தைச் சேர்ந்த விக்கும் சம்பத் திம்புல்கஸ்தென்ன என்பவரே இதனைக் கண்டுபிடித்துள்ளார்.

சுமார் ஆறு வருடங்களாக பாதரசம் தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் பிரதிபலனாக இந்தப் புதிய கண்டுபிடிப்பை செய்ய முடிந்துள்ளதாக அவர் கூறுகிறார்.
இந்த இயந்திரத்தின் மூலம் 7 கிலோ வோட் மின்சாரத்தை அவர் உற்பத்தி செய்து வருகிறார்.
அத்துடன் அந்த மின்சாரத்திலேயே தனது வீட்டில் இருக்கும் மின் விளக்குகள் உட்பட இலத்திரனியல் பொருடகள் இயக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பென்சிலை செய்ய பயன்படுத்தப்படும் கரியை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் பாதரசத்தை இட்டு, 300 பாகை செல்சியஸ் அளவு வெப்பமூட்டி அதன் மூலம் இயந்திரம் இயங்குவதால், 7 கிலோ வோட் மின்சாரம் உற்பத்தியாகின்றது.
இந்த மின்சாரத்தின் மூலம் தனது வீட்டில் உள்ள தொலைக்காட்சி பெட்டி, சலவை இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி என்பன இயங்குவதாகவும் சம்பத் கூறியுள்ளார்.
பாதரசம் என்பது உருகி ஆவியாகும் உலோகம் அல்ல. பாதரசத்தை ஒரு முறை மாத்திரமே இயந்திரத்திற்குள் செலுத்த வேண்டும். அதன் பின்னர் பிரதிபலன்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும்.
தற்போது உலகில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய தண்ணீர், கழிவு எண்ணெய், நிலக்கரி, டீசல், பெட்ரோல் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். தண்ணீரை தவிர ஏனைய எரிபொருட்கள் எரிந்து விடும்.
பாதரசம் எரிந்து தீர்ந்து போகாது. பாதரசத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்தால், மிக குறைந்த விலையில் ஒரு அலகு மின்சாரத்தை மக்களுக்கு வழங்க முடியும். உலகில் எந்த நாடும் இந்தப் பரிசோதனையை மேற்கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யவில்லை.
புராண காலத்தில் காலத்தில் மன்னன் இராவணன் பாதரசத்தை பயன்படுத்தி புஸ்பக விமானத்தை செலுத்தியதாக கூறப்படும் நிலையில் இதனையே பின்பற்றியதாக விக்கும் சம்பத் திம்புல்கஸ்தென்ன தெரிவித்துள்ளார்.