Tuesday, March 21, 2023
HomeStickerபாதங்கள் வெடிப்பின்றி மிருதுவாக இருக்கனுமா? இதை செய்து பாருங்க!!

பாதங்கள் வெடிப்பின்றி மிருதுவாக இருக்கனுமா? இதை செய்து பாருங்க!!

பொதுவாக பெரும்பாலோனோருக்கு பாதவெடிப்பு நிரந்தரமான பிரச்சனையாக இருக்கின்றது.

பாதங்கள் எப்போதும் வெடிப்பின்றி மிருதுவாக இருக்கும். கண்டுகொள்ளாமல் விடும்போது பாளமாக வெடித்து வலி ஏற்படுகின்றது.

பாதத்தில் போதுமான ஈரத்தன்மை இல்லாதபோது பாதங்கள்வெடிக்க ஆரம்பிக்கும். அதே போல் உடல் எடை அதிகரிக்கும்போதும் கொழுப்புத் திசுக்கள் உடைந்து பாரம் தாங்காமல் சதை வெடிக்க ஆரம்பிக்கும். இதனையே நாம் பாத வெடிப்பு என்று கூறுகின்றோம்.


இதற்கு பணத்தை அதிகம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு கூட சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

வாழைப்பழத்தை நன்றாக மசித்து வெடிப்பின் மேல் தேயுங்கள். சில நிமிடங்களில் கழுவுங்கள். இவை ஒரே வாரத்தில் பாத வெடிப்பை மறையச் செய்து மிருதுவான பாதத்தை தரும்.

வாசலினை எடுத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து பாதங்களில் தடவுங்கள். இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் கழுவுங்கள். சாக்ஸ் போட்டுக் கொள்வதால் இன்னும் நல்லது.

ஆலிவ் எண்ணெயில் சில துளி லாவெண்டர் எண்னெய் கலந்து பாத வெடிப்புகளில் தடவுங்கள். இது அற்புதமான ரிசல்ட்டை தரும். விரைவில் வெடிப்பிலிருந்து குணம் பெறுவீர்கள்.

விளக்கெண்ணெயை சூடுபடுத்தி மஞ்சள் கலந்து தூங்குவதற்கு முன் வெடிப்பில் இந்த எண்ணெயை பூசிக் கொண்டு படுங்கள். இவை ஒரு சில நாட்களில் வெடிப்பை போக்கும்.

வினிகரை சிறிது எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து பாதங்களை அதில் 10 நிமிடம் தினமும் ஊற வைக்கவும். பின்னர் ஸ்கர்ப் செய்யுங்கள். மிக விரைவில் பலன் தரும். மேலும் வெடிப்பு உண்டாகாமலும் தடுக்கும்.

தேன் ஒரு ஸ்பூன் எடுத்து அதில் அதே அளவு பால கலந்து பாதத்தில் தடவவும். மறு நாள் காலையில் கழுவுங்கள். இது பாதங்களை மிருதுவாக்கும். சொரசொரப்புத்தன்மையை நீக்கும்.

ஓட்ஸை பொடித்து அதனைக் கொண்டு தினமும் பாதங்களை ஸ்க்ரப் செய்யுங்கள். இவை கால்களை மிருதுவாக்குவதோடு, பாதங்களை அழகாக்கு. ஓஸினால் தேய்க்கும்போது பாதங்களின் பக்கவாட்டில் இருக்கும் கருமையை எளிதில் மறையச் செய்யும்.

ஓட்ஸுடன் எலுமிச்சை சாறு கலந்தால் இன்னும் நல்ல பலன்களை தரும். ஓட்ஸை பொடி செய்து அவற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து பாதத்தில் தேயுங்கள். சில நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த குறிப்பு இன்னும் வேகமாக பலனைத் தரும்.

லிஸ்டெரின் வினிகர் மற்றும் நீர் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து பாத வெடிப்புகளில் தடவுங்கள். அல்லது இவை கலந்த நீரில் 15 நிமிடம் பாதங்களை ஊற விடுங்கள். இவை விரைவில் வெடிப்பை குணப்படுத்தும்.

பாதம் மூழ்கும் அளவிற்கு நீரை வெதுவெதுப்பக எடுத்துக் கொண்டு அதில் ஆப்பிள் சைடர் வினிகரை 1 மூடி கலந்து பாதங்களை 10 நிமிடம் ஊற வைகக்வும். வாரம் 3 நாட்கள் செய்தால் வெடிப்பு மறையும். தவிர பாத வெடிப்பு வருவதை தடுக்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments