தெஹிவளை/ கல்கிஸை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த நாய்க்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு சைக்கிள் ஒன்று திருடப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத இருவர் நாய்க்கு முதலில் மயக்க மருந்து பயன்படுத்துவதை அதன் உரிமையாளர் பகிர்ந்துள்ள சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன.
சிறிது நேரம் கழித்து வாயங்கதவை திறக்கும் அவர்கள் வீட்டிற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு நடந்து செல்வதை வீடியோ பின்னர் காட்டுகிறது.