காலிமுகத்திடலில் நேற்றுமுன்தினம் அதிகாலை கடற்படையினரின் கொடூர தாக்குதல் வடக்கு கிழக்கில் தமிழர்கள் எதிர்கொண்ட கொடூரத்தை உணர வைத்துள்ளது.
நேற்றுமுன்தினம் அதிகாலை காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடற்படையினர் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டதுடன், பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறான தாக்குதலின் அடிப்படையில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான டிலான் சேனநாயக்க என்பவர் நேற்று காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த காணொளியில் “எம்மை இவ்வளவு மோசமாக தாக்குகின்றார்கள் என்றால் தமிழர்களை எவ்வாறு இராணுவத்தினர் தாக்கியிருப்பார்கள். போரில் மக்கள் செத்து மடியும் போது நாங்கள் போர் வெற்றி கொண்டாடினோம்.
அப்படி என்றால் நாம் எப்படி முட்டாளாக்கப்பட்டு தமிழ்களை புலிகள் என்று ஒதுக்கியிருப்போம். தொலைகாட்சியில் காட்டப்பட்ட விடயங்களை வைத்து பிரபாகரன் மீது எங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தினார்கள். நாங்களும் அவர்களை புலிகள், தீவிரவாதிகள் என ஒதுக்கி வைத்தோம்.
அப்படி என்றால் சிங்கள மக்கள் மீதான தமிழர்களின் கோபத்தில் நியாயம் உள்ளது. இராணுவத்தின் செயற்பாடு அவ்வாறான நிலையில் உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.