Tuesday, March 21, 2023
HomeStickerஇராணுவத்தினால் வீதியில் செல்லும் பெண்களுக்கு ஏற்பட்ட நிலை! வைரலாகும் வீடியோ

இராணுவத்தினால் வீதியில் செல்லும் பெண்களுக்கு ஏற்பட்ட நிலை! வைரலாகும் வீடியோ

இலங்கையில் வீதியில் செல்லும் பெண்களை, இராணுவ வீரர்களை உள்ளடக்கிய குழு ஒன்று நக்கல் மற்றும் கிண்டல் செய்வதான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த காணொளி பதிவில் சில இராணுவ வீரர்கள் பாதுகாப்பு கடமையின் நிமித்தம் வீதியின் ஓரத்தில் நிற்கின்றனர்.

அதே வீதியில் செல்லும் பெண்களை கேலி செய்து, அவர்களை கிண்டல் செய்வது போன்று காட்சிகள் பதிவாகியுள்ளது.

குறித்த வீடியோ பதிவை அவதானித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், அந்தக் காணொளியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பரபரப்பான தெருவில் இராணுவத்தினர் மிக கீழ் தனமாக நடந்து கொள்கின்றனர்.​​


வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போரின்போதும் அவர்கள் எப்படி நடந்துகொண்டிருப்பார்கள் என்று சிந்தியுங்கள் என டுவீட் செய்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments