இஸ்ரேலில் நீச்சல் குளம் திடீரென புதை குழியாக மாறியதால், அதில் குளித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் தண்ணீருடன் குழிக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார்.
இஸ்ரேலில், டெல் அவிவில் இருந்து தென்கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்மி யோசெப் நகரத்தத்தில் வியாழக்கிழமை அன்று ஒரு குழு பார்ட்டி நடத்திக்கொண்டிருக்கபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“One man has been injured and another is missing after a sinkhole opened up in a inground pool at a home in central Israel.
The incident occurred during a pool party." pic.twitter.com/S9cByAFebx
— natureismetal (@NIMactual) July 21, 2022
நீச்சல் குள பார்ட்டி கொண்டாட்டத்தில் சுமார் 50 பேர் இருந்தனர். ஆனால் சம்பவத்தின்போது, நீச்சல் குளத்தில் மொத்தம் 6 ஆண்கள் இருந்துள்ளனர். அப்போது நீச்சல்குளத்திற்கு நடுவே திடீரென ஒரு குழி (sinkhole) ஏற்பட்டு மொத்த நீரும் உள்ளே உறிஞ்சப்பட்டது.
குலத்தை இருந்தவர்களில் 34 வயதுடைய நபர் உள்ளே இழுக்கப்படுவதிலிருந்து எப்படியோ தப்பி வெளியேறினார். ஆனால் Klil Kimhi என்ற 32 வயது நபர் 43 அடி ஆழமான அந்த புதைகுழிக்குள் இழுத்துச்செல்லப்பட்டார். மற்ற நான்குபேர் காயமின்றி இருந்தனர்.
உள்ளே விழுந்த நபரை மீட்கும்பணி நடந்துவருகிறது. ஆனால், மீட்பு பணியாளர்களும் உள்ளே இழுத்துச்செல்லப்படலாம் என்ற நிலையில், மீட்புப்பணி தாமதமாகிவருகிறது. புதையுண்ட நபர் இந்நேரம் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

பல்வேறு வழிகளில் இதுபோன்ற குழிகள் ஏற்படலாம், ஆனால் அவை பெரும்பாலும் நிலத்தடி நீரில் கரைந்து, கழுவப்பட்டு, பூமியின் மெல்லிய அடுக்கால் மட்டுமே மூடப்பட்டிருக்கும் திறந்த குகையை விட்டுச்செல்கிறது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு கூறுகிறது.
சுண்ணாம்பு, கார்பனேட் பாறை அல்லது உப்புப் பாறைகளால் ஆன பாறைகளைக் கொண்ட இடங்களில் இதுபோன்ற குழிகள் ஏற்படுவது இயல்பு என கூறப்படுகிறது.
இயற்கையான நில அமைப்பு மற்றும் நீர் வடிகால் முறைகளை மாற்றியமைக்கும் நிலத்தடி நீர் இறைத்தல் மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் மனித நடவடிக்கைகளாலும் சிங்க்ஹோல் குழிகள் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.