Sunday, May 28, 2023
HomeStickerவெள்ளவத்தையில் சகோதரிகளுக்கு நேர்ந்த அவலம் - ஒருவர் பலி

வெள்ளவத்தையில் சகோதரிகளுக்கு நேர்ந்த அவலம் – ஒருவர் பலி

வெள்ளவத்தை பகுதியில் ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த இரண்டு யுவதிகளும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு யுவதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 20 வயதுடைய யுவதி என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த யுவதி கிரேசியன் தொகுதி, உடபுசல்லாவ பிரதேசத்தில் வசிப்பவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் மோதியதில் நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த யுவதியும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் யுவதியும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் என தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments