Tuesday, March 21, 2023
HomeStickerஉங்களுக்கு பொலிவான பளபளக்கும் முகம் வேண்டுமா? இதோ சில அசத்தலான டிப்ஸ்

உங்களுக்கு பொலிவான பளபளக்கும் முகம் வேண்டுமா? இதோ சில அசத்தலான டிப்ஸ்

பொதுவாக வெயில் காலத்தில் அதிகப்படியான வியர்வை மற்றும் ஈரப்பதமின்மை போன்ற காரணங்களால் கட்டி மற்றும் தசை சுருக்கம் போன்ற பிரச்சினைகள் வருவது இயல்பானது தான்.

இதனால் முகம் பொழிவிழந்து காணப்படும். அதற்கான பலர் அதிகப்பணத்தை செலவழித்து கண்ட கண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இருப்பினும் இது தற்காலிகம் தான்.

நீங்கள் இழந்த பொழிவை திரும்ப பெற வீட்டில் உள்ள சில இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.

குறிப்பாக, இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதால் இதில் பக்க விளைவுகள் கிடையாது. தற்போது இதனை எப்படி தயாரிப்பது? எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

தேவையானவை
கற்றாழை ஜெல் – 2 டீ ஸ்பூன்
வெள்ளரிக்காய்
செய்முறை
2 டீ ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல் எடுத்து, அதனுடன் அரைத்து வைத்த வெள்ளரிக்காய் சேர்த்து பேஸ்ட் போல மாற்றிக் கொள்ளவும்.

இதனை சருமத்தில் நேரடியாக அப்ளை செய்து, லேசாக மசாஜ் செய்யவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவிக் கொள்ளலாம்.

ஒரு வாரத்திற்கு தேவையான பேஸ்ட்-ஐ ஒரே நாளில் தயார் செய்து, அதை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் சமயங்களில் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

பலன்கள்
பருவ கால மாற்றங்களால் ஏற்படும் எண்ணெய் வழிந்த முகம் அல்லது வறண்ட முகம் ஆகிய பிரச்சனைகளில் இருந்து உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ளலாம்.
இது உங்கள் சருமத்தை பொழிவாக மாற்றும்.
கன்னத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து நல்ல தோற்றத்தை கொடுக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments