Tuesday, March 21, 2023
HomeStickerவறண்ட சருமம் பளபளன்னு மின்னனுமா? இதோ அசத்தலான டிப்ஸ்

வறண்ட சருமம் பளபளன்னு மின்னனுமா? இதோ அசத்தலான டிப்ஸ்

பொதுவாக வறண்ட சருமம் அனைவருக்கும் ஒரு சவாலாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் வறண்ட சருமத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இது சாதாரணமாக இருந்தாலும், இதனால் உண்டாகும் பாதிப்புகள் அதிகம்.

இதனை தக்க சமயத்தில் கவனிக்கத் தவறிவிட்டால், சருமம் தொடர்பாக பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

அந்தவகையில் வறண்ட சருமத்தை பாதுகாத்து, அழகான தோற்றத்தை பெற சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.

காபி கொட்டைகளை அரைத்து கொள்ளவும். அரைத்த தூளுடன் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி நன்றாக சூழல் வடிவில் தேய்க்கவும். 5 நிமிடங்கள் தேய்த்தவுடன் தண்ணீரால் முகத்தை கழுவவும். இயற்கையான முறையில் சருமம் புத்துயிர் பெற இது உதவுகிறது.

க்ரீன் டீயை கொதிக்க வைக்கவும். அதில் 1 ஸ்பூன் டீயை எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றவும். ஆறியவுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். நன்றாக கலந்து கொண்டு, தேனை சேர்க்கவும். ஈரப்பதத்தை கொடுக்கும் தன்மை தேனுக்கு உண்டு. இந்த ஸ்கரப்பை முகத்தில் தடவவும். சில நிமிடங்கள் நன்றாக முகத்தை தேய்க்கவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

வெதுவெதுப்பான நீரை முகத்தில் தெளிக்கவும். மெல்லிய துணியால் முகத்தை ஒத்தி எடுக்கவும். க்ளென்சிங் க்ரீமை ஒரு கிண்ணத்தில் போடவும். நைசாக அரைத்த சர்க்கரையை அதில் சேர்க்கவும். இரண்டையும் கலந்து கெட்டியான பேஸ்டை உருவாக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவவும். பின்பு சூழல் வடிவில் தேய்க்கவும். இந்த கலவை கண்களில் படாமல் பார்த்துக் கொள்ளவும். நன்றாக தேய்த்தவுடன் துணியால் அந்த கலவையை முகத்தில் இருந்து நீக்கவும். குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

½ கப் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். இதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். இதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதனை சேர்ப்பதால் இந்த ஸ்க்ரபுக்கு சுத்தீகரிக்கும் தன்மை கிடைக்கிறது . முகத்தை நன்றாக கழுவி, காய்ந்தவுடன் இந்த ஸ்க்ரப்பை முகத்தில் தடவவும். நன்றாக தேய்த்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

பாதாம் சிலவற்றை எடுத்து அரைத்து கொள்ளவும். 1 கப் அரைத்த பாதாமுடன், சிறிது பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். இதனுடன் எலுமிச்சை சாறு, ரோஜா எண்ணெய், லவெண்டேர் எண்ணெய் போன்றவற்றில் எதாவது ஒன்றை நறுமணத்திற்காக சேர்க்கலாம். பின்பு இந்த கலவையை முகத்தில் தடவவும். சூழல் வடிவில் சில நிமிடங்கள் தேய்த்த பிறகு தண்ணீரால் முகத்தை கழுவவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments