Wednesday, August 17, 2022
HomeStickerயாழ் - இந்திய நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

யாழ் – இந்திய நேரடி விமான சேவைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அடுத்தவாரம் சென்னைக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வட மாகாணத்தின் பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, யாழ். சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இரத்மலானை விமான நிலையத்திற்கும் விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொரோனா காலப்பகுதில் இருந்து குறித்த விமான சேவைகள் நீண்ட நாட்களாக தடைப்பட்டுள்ளன.
இந்நிலையில் மீண்டும் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை விரைவில் செயற்படுத்துமாறு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments