Sunday, October 1, 2023
HomeStickerபல்வேறு நோயை தீர்க்கும் தேன் லவங்க பொடி கலவை

பல்வேறு நோயை தீர்க்கும் தேன் லவங்க பொடி கலவை

தேன் உலக மக்களுக்கு இறைவனால் அளிக்கப்பட்ட அமிர்தம் என்றாலும் மறுப்பதற்கில்லை.

உலகில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் அரசன், தேன் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏனென்றால் உலகில் உள்ள அனைத்து உணவுப் பொருட்களும் கெட்டும் போகும் தன்மை உடையது ஆனால் தேன் மட்டும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாது. அதிகபட்ச மாற்றம் எதுவென்றால், உறைந்து கிறிஸ்டல் கற்களாக மாறும்.

அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும்.

(தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்துவிடும்) இதுதான் தேனின் இயல்பு.

ஆனால் இந்த தேன் மனித இனத்திற்கு மிகுந்த பயனுள்ள ஆயுர்வேத மருந்தாகப் பயன்படுகிறது.

இன்றைய சூழ்நிலையில் இதயக் கோ ளாறு மிகுந்த வேகமாக பரவிவரும் ஒரு கொடிய நோயாக இனம் காணப்படுகிறது.

எல்லா வயதினரையும் தாக்கும் நோயாகவும் இது உள்ளது.

இந்த நோய் ஏற்பட மிக முக்கிய காரணம் மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இவ்வாறான கொடிய நோயை எளிதாக தீர்க்கும் சக்தி தேனுக்கு உண்டு.

இதயத்தின் ரத்த குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், போதிய ரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள். 2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் ரொட்டியுடன் அல்லது நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வாருங்கள்.

இதய நோய் உங்களை மீண்டும் அனுகாது.

ஏற்கெனவே உங்களுக்கு மாரடைப்பு வந்திருந்தால், மீண்டும் நிச்சயம் வராது.

இதய நோய் உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு பலவீனமாக இருக்கும்.

அவர்களுக்கு இந்த தேனும் லவங்கப்பட்டை பொடியும் ஒரு வசப்பிரசாதம்.

1 மாதத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.

அமெரிக்கா, கனடா நாடுகளில் மருத்துவமனைகளில் இந்த உணவை கொடுத்து வருகிறார்கள்.

இதனால் அதிசயத்தக்க மாற்றங்களை பதிவு செய்துள்ளார்கள்.

இரத்த ஓட்டத்தில் உள்ள அடைப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூச்சு வாங்குவதை குறைத்து, இதய துடிப்பை பலப்படுத்தி, இதய நோயை விரட்டி அடிக்கும் அற்புத சக்தி கொண்டது தேனும் லவங்கமும்.

மூட்டு வலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1 கப் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன், 1 சின்ன தேக்கரண்டி லவங்க பொடியை கலந்து குடித்து வாருங்கள். ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும்.

2 தேக்கரண்டி லவங்கபொடி, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு தண்ணீரில் கலந்து குடித்து வர, சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். கோடைக்கலத்தில் இது அரு மருந்து.

2 மணி நேரங்களில் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை 10% குறைக்கும் தன்மை கொண்டது தேன்.

2 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியையும் 16 அவுன்ஸ் தண்ணியுடன் கலந்து குடியுங்கள். 2 மணி நேரத்தில் உங்கள் கொழுப்பு சத்து அளவு குறையும்.

ஒரு நாளில் 3 முறை 2 கரண்டி தேன், 1 கரண்டி லவங்க பொடியை மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் கரைந்து விடும்.

சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து நோய் வரவே வராது.

சூடான தண்ணீரில் 1 தேக்கரண்டி தேனை வைத்து இளஞ்சூடாக்கி அதனுடன் 1/4 தேக்கரண்டி லவங்க பொடியை குழைத்து 3 நாளைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

சைனஸ், சளி, இருமல் என எல்லாமே ஓடி போகும்.

2 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கபவுடர் கலந்து உண்டு வர வயிற்றுவலி, வயிற்றில் அல்சர் போன்றவை அடியோடு மறையும்.

தேனுடன் லவங்க பொடியை சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை தீரும்.

சிலருக்கு சாப்பிட்ட உடன் வயிறு பெருத்து, வயிறு அடைத்து சிரமபடுவார்கள்.

இவர்கள் உணவு உண்பதற்கு முன் 2 தேக்கரண்டி தேனில் சிறிது லவங்க பொடியை தூவி சாப்பிட வேண்டும்.

பிறகு இவர்கள் சாப்பிட்டால் இவர்களுக்கு உணவு சுலபமாக வலியில்லாமல் ஜீரணமாகும்.

நீண்ட ஆயுளுக்கு 3 கப் மிதமான சூடில் உள்ள நீரில் 4 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியை கலந்து வைத்துக்கொண்டு ஒரு நாளில் 3 அல்லது 2 முறையாக பருக இளமை

தொண்டையில் ஏற்படும் கிச் கிச் போக்க 3 மணிநேரத்திற்கு ஒருமுறை 1 தேக்கரண்டி தேனை சாப்பிட்டால் தொண்டையில் கிச்கிச் விரைவில் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள்.

3 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கப் பொடி இரவு படுக்கும் போது இதை குழைத்து பருக்களின் மேல் தடவுங்கள்.

காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்புங்கள். தொடர்ந்து 2 வாரம் இதை செய்து வர பருக்களை வேரோடு அழிந்துவிடும்.

சொறி, படை போன்ற பல சரும நோய்களை குணப்படுத்தும் தேன், லவங்க பொடி இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு குழைத்து இந்த சரும நோய்களின் மேல் தடவி வர இந்த சரும் நோய்கள் குணமாகும்.

ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி லவங்க பொடி என்ற கணக்கில் குழைத்து, தினமும் 3 வேளை உண்ண ஒரே மாதத்தில் புற்று நோய் குறைந்து விடுமாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments