ஆவணி பிறந்தாலே உற்சாகம் பிறக்கும்.
விவசாய பணிகள் சிறப்பாக நடைபெறும்.
சுப காரிய விஷேசங்கள் நடைபெறும்.
கால புருஷ தத்துவத்தில் 5வது மாதம் சூரியன் சொந்த வீட்டில் பயணம் செய்கிறார்.
சிங்க மாதம் ஆவணி மாதம் சீமந்தம், கிரகப்பிரவேசம் அதிகம் நடைபெறும் மாதம்.
அற்புதமான மாதம் பல ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய ராஜயோகம் கிடைக்கும்.
ஆளுமை தன்மைக்கு உரிய கிரகம் சூரியன் வலுவாக இருந்தால் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
கிருஷ்ண பரமாத்மா அவதரித்த ஆவணி மாதம் ஸ்ரீஜெயந்தி, கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது.
முழுமுதற்கடவுள் மூலவர் விநாயகர் சதுர்த்தி, ஆவணி மூலம் திருவிழா, ஆவணி அவிட்டம், ஓணம் பண்டிகை போன்ற பல பண்டிகைகளும் கொண்டாடப்படும்.
ஆவணி மாதத்தில் மூன்று கிரகங்கள் வக்ரமடைந்து பயணம் செய்கின்றன.
புதன் தனது ராசியில் உச்சம் பெற்று பயணம் செய்தாலும் வக்ரமடைகிறார்.
சனி, குரு, புதன் கிரகங்கள் வக்ரமடைந்து பயணம் செய்யும் இந்த மாதத்தில்
எந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் கைகூடி வரும், காதல் மலரும் என்று பார்க்கலாம்.
மேஷம்

சூரியன் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்வதால் நன்மைகள் அதிகம் நடைபெறும்.
ஆட்சி பெற்ற சூரியன் மீது குருவின் பார்வை கிடைக்கிறது.
திருமணம் சுபகாரியம் கை கூடும். பழைய கடன்கள் அடைபடும்.
புதிய வீடு வாங்க முயற்சி செய்யலாம்.
கணவன் மனைவியிடையே காதல் அதிகரிக்கும்.
பிள்ளைகளால் சந்தோஷம் நிம்மதி உண்டு.
புதிய வியாபாரம் தொடங்கலாம், அனைத்திலும் நீங்கள் ஜெயித்துக் காட்டுவீர்கள்.
ரிஷபம்

ஆவணி மாதம் முழுக்க குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
எல்லாவகையிலும் வெற்றி உண்டாகும்.
வீடு மாற்றம் ஏற்படும்.
புதிய வீடு கட்டலாம்.
திருமணம் சுபகாரியம் தொடர்பாக பேசலாம்.
சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.
அரசு பதவிக்கு முயற்சி செய்யலாம்.
புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பெண்கள் தங்க நகைகள் வாங்கலாம்.
பழைய வண்டியை கொடுத்து விட்டு புதிய வண்டியை வாங்கலாம்.
மிதுனம்

உங்க ராசிநாதன் புதன் வலுப்பெறும் மாதம்.
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
சூரியன், புதன் மூன்றாவது வீட்டில் பயணம் செய்வதால் அற்புதமான யோகம் கிடைக்கும்.
பேச்சில் தெளிவு பிறக்கும்.
சுக்கிரன் பயணம் சாதகமாக உள்ளது.
பணப்புழக்கம் அதிகரித்து கடன் நீங்கும்.
செல்வாக்கு அதிகரிக்கும்.
புதிய பொறுப்புகள் அதிகரிக்கும்.
கூடுதல் லாபம் கிடைக்கும்.
இடமாற்றம் ஏற்படும்.
வேலையில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும்.
திருமணம் சுபகாரியம் கை கூடி வரும்.
கடகம்

சூரியன் இரண்டாம் வீட்டில் பயணம் செய்வதால் அற்புதங்கள் அதிகம் நடைபெறும்.
மனதில் இருந்த பயம் நீங்கும்.
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும்.
வெற்றியும் சந்தோஷமும் உண்டு.
செவ்வாயின் பயணம் சாதகமாக உள்ளது.
காரிய வெற்றியும் செய் தொழிலில் லாபமும் உண்டு.
வீடு மனை வாங்கலாம்.
குரு பார்வை ராசிக்கு கிடைப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் உண்டு.
வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
சிம்மம்

ராசிநாதன் சூரியன் ஆட்சி பெற்று பயணம் செய்யும் மாதம்.
நிம்மதியும் சந்தோஷமும் அதிகம் நடைபெறும் மாதம்,
மனதில் உற்சாகம் அதிகரிக்கும் சுறுசுறுப்பு கூடும்.
பேச்சில் கம்பீரம் அதிகரிக்கும்.
அதிகார பதவிகள் தேடி வரும்.
குடும்பத்தில் இருந்த மனக்குழப்பங்கள் நீங்கும்.
கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
நல்ல வேலை கிடைக்கும்.
பெரிய பதவி தேடி வரப்போகிறது.
ஆவணி மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதம்.
இறையருள் நிறைந்திருப்பதால் கனவுகள் நிறைவேறும் மாதமாக அமைந்துள்ளது.
கன்னி

ஆவணி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் வசதி வாய்ப்புகள் பெருகும்.
குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும்.
வீடு மனை வாங்கும் போது கவனம் தேவை.
ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
புதன் உங்கள் ராசிக்கு வந்து ஆட்சி உச்சம் பெற்று பயணம் செய்வதால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
நன்மைகள் அதிகம் நடைபெறும்.
மறைமுக எதிரிகள் பிரச்சினை முடிவுக்கு வரும்.
எதிரிகள் தொல்லைகள் நீங்கும்.
கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
சந்தோஷங்கள் அதிகம் நடைபெறும் மாதமாக அமைந்துள்ளது.
துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, லாப ஸ்தானத்தில் சூரியன் பயணம் செய்வதால் பண வரவு அதிகரிக்கும்.
திருமணம் சுப காரியம் கை கூடி வரும்.
புதிய வீட்டிற்கு இடம் மாறுவீர்கள் சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கும்.
சகோதரர்கள் ஆதரவாக பேசுவார்கள்.
பெற்றோர்களின் ஆசி கிடைக்கும்.
வீடு கட்ட அப்ரூவல் வாங்கலாம்.
வீடு கட்டுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.
தொழில் தொடங்கலாம்.
வீடு பராமரிப்பு செய்வீர்கள் வீட்டினை அழகு படுத்துவீர்கள்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
சுப காரிய தடைகள் நீங்கும்.
விருச்சிகம்

விருச்சி ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும் மாதம்.
பெரிய பொறுப்புகள், கடமைகள் தேடி வரும்.
பிள்ளைகளால் சந்தோஷம்.
அதிகமான லாபம் கிடைக்கும்.
மகனுக்கோ மகளுக்கோ திருமணம் கை கூடி வரும்.
வீடு கட்டும் யோகம் கை கூடி வரும்.
மன சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அரசு தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல ரிசல்ட் தேடி வரும்.
அரசியல் பதவிகளில் இருப்பவர்களுக்கு திறமை வெளியே தெரியவரக்கூடிய மாதமாக அமைந்துள்ளது.
தனுசு

தனுசு ராசிக்காரர்களே ஆவணி மாதத்தில் யோகாதிபதி சூரியன் ஒன்பதாவது வீட்டில் பயணம் செய்வதால் நன்மைகள் அதிகம் நடைபெறும்.
வழக்குகள் சாதகமாக முடியும் வெற்றிகள் தேடி வரும்.
மகளுக்கோ மகனுக்கோ திருமணம் நடைபெறும்.
சுக்கிரன் போக்கும் சாதகமாக உள்ளது.
வீடு மனை வாங்கலாம் வண்டி வாகனம் வாங்கலாம்.
கணவன் மனைவிக்கு இடையே இருந்த புரிதல் நன்றாக இருக்கும்.
சிலருக்கு காதல் மலரும் மாதமாக உள்ளது.
காதலிப்பவர்களுக்கு கல்யாணம் கை கூடி வரும்.
மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு சூரியன் எட்டாவது வீட்டில் பயணம் செய்யப்போகிறார்.
குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
பெரிய அளவில் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் கூடும்.
குழந்தை பாக்கியம் ஏற்படும்.
பணப்புழக்கம் அதிகரிக்கும்.
வாகனம் வாங்கலாம்.
நண்பர்களால் ஆதாயம் உண்டு.
வியாபாரம் தொழில் லாபமாக இருக்கும்.
தொழிலில் ஜெயித்து காட்டும் மாதமாக அமைந்துள்ளது.
அனுமனை வணங்க வெற்றிகள் தேடி வரும், அதிர்ஷ்டங்கள் கை கூடி வரும்.
கும்பம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார்.
சூரியன் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சுக்கிரன் பயணம் நன்றாக இருப்பதால் பண வரவு அதிகரிக்கும்.
உங்களின் திறமை அதிகரிக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே இருந்த ஈகோ பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
சகோதர வகையில் சந்தோஷம் அதிகரிக்கும்.
உங்களின் பலவீனம் நீங்கி பலம் அதிகரிக்கும்.
திருமணம் சுப காரிய பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெறும்.
ராஜயோகம் கை கூடி வரும் மாதமாக அமைந்துள்ளது.
மீனம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் தீராத பிரச்சினைகள் தீரும்.
புதிய சொத்துக்கள் வாங்கலாம்.
வண்டி வாகனம் வாங்கலாம்.
பழைய நண்பர்களால் உதவி கிடைக்கும்.
திடீர் பண வரவு வரும்.
மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும்.
உங்களுடைய பட்ஜெட்டிற்கு தகுந்த மாதிரி வீடு வாங்கலாம்.
அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும்.
வேலையில் வெற்றிகள் தேடி வரும்.
புரமோசன் கிடைக்கும்.
மீன ராசிக்காரர்களுக்கு ஆவணி மாதம் அதிர்ஷ்டகரமான மாதமாக அமையும்.