Wednesday, September 28, 2022
HomeStickerதிருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுக்கும் சம்பிரதாயம் ஏன்?

திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுக்கும் சம்பிரதாயம் ஏன்?

திருமண அழைப்பிதழ்கள் மட்டுமல்ல. ஒருவர் இன்னொருவரிடம் பொருளொன்றை கடனாகக்கொடுக்கையில் தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.

அரிசி, நெல் முதலானவற்றை கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.

பணமாயிருந்தால் தட்டு.

இந்த சம்பிரதாயம் உருவாகியதன் காரணம் கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில் மேல்கீழாய் இருந்தாலும் அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே உருவாக்கப்பட்ட சம்பிரதாயமாகும்.

வெறுமனே கையால் கொடுத்தால், கொடுப்பவர் கை மேலும் வாங்குபவர் கை கீழுமிருக்கும்.

இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நம்மவர்களின் மனதுள் தோன்றக்கூடாதென்பதற்காகவே எப்பொருளை கொடுத்தாலும் தட்டில் வைத்துக்கொடுப்பதை பழக்கமாகக்கொண்டிருந்தனர்.

கால மாற்றத்தால் தற்போது இது மருவி விட்டாலும், நாம் நமது பழக்க வழக்கங்களை மதித்து நடக்க வேண்டும் என்பதற்காகவே இதை சம்பிரதாயமாக மாற்றினர் நமது முன்னோர்.

இதே முறைதான் ஒருவரை அழைப்பதிலும் இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments