Tuesday, September 27, 2022
HomeStickerமீண்டும் இலங்கை திரும்பும் கோட்டாபய - புகலிடக் கோரிக்கை நிராகரிப்பு

மீண்டும் இலங்கை திரும்பும் கோட்டாபய – புகலிடக் கோரிக்கை நிராகரிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது 90 நாள் தாய்லாந்து விசா முடிந்ததும், எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேறு நாட்டில் தற்காலிக தங்குமிடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாததால், அவர் இலங்கை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச இன்று சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு தாய்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ளார். அங்கு சுற்றுலா விசாவில் 90 நாட்கள் தங்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா, மனிதாபிமான அடிப்படையில் ராஜபக்ச தாய்லாந்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார் என்று வெளிநாட்டு ஊடகங்களுக்கு நேற்று உறுதிப்படுத்தினார்.

மேலும் அது தற்காலிக தங்குமிடம் மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார். கோட்டாபய 3 மாதம் தங்குவதற்காக, இலங்கை அரசாங்கம், நேரடியாக தாய்லாந்தின் அனுமதியை கோரியிருந்தது.

இதற்கிடையில் கோட்டாபய ராஜபக்சவின் பயண செலவுகளை அவரும் அவரது மகன் மனோஜ் ராஜபக்சவும் ஏற்றுக்கொண்டதாகவும், அவரையும் அவரது மனைவியையும் மாலைத்தீவுக்கு ஏற்றிச் சென்ற விமானப்படை விமானத்தை தவிர வேறு எந்த அரச நிதியும் இதுவரை பயன்படுத்தப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாடுகளில் முன்னாள் ஜனாதிபதியின் தங்குமிடத்திற்கு நிதியளிக்கும் பணக்கார வர்த்தகர்களும் உள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவிக்கு தாய்லாந்தில் எவ்வாறான தங்குமிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது இன்னும் தெரியவில்லை.

இதேவேளை மத்திய கிழக்கில் கோட்டாபய ராஜபக்ச தஞ்சம் கோருவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவருக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று தெரியவருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments