Sunday, October 1, 2023
HomeStickerகுண்டு ஒல்லி பிரச்சனையை தீர்க்கும் நம்ம பாட்டி வைத்திய முறைகள்

குண்டு ஒல்லி பிரச்சனையை தீர்க்கும் நம்ம பாட்டி வைத்திய முறைகள்

இந்தப் பிரச்சனையை போக்க நமது முன்னோர் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நல்ல இயற்கை மருத்துவ முறைகளை கூறிச் சென்றுள்ளனர்.

அதனை நாம் பாதுகாக்காமல் விட்டு விட்டோம்.

நமது முன்னோர் ஒல்லியான உடலை குண்டாக மாற்ற, கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்துள்ளனர்.

இதனால் ஒல்லியான உடல் குண்டாக மாற்றி வெற்றியும் கண்டுள்ளனர்.

குண்டான உடல் ஒல்லியாக மாற்ற தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் மிதமான சூட்டில் உள்ள நீரில் தேனையும், லவங்க பொடியையும் கலந்து குடிக்கவும்.

அதே போல இரவில் படுக்க போகும் முன்னர் தேனையும், லவங்க பொடியையும் மிதமான வெந்நீரில் கலந்து குடிக்கவும்.

தொடர்ந்து இப்படி செய்து வந்தால் எத்தனை குண்டாக இருந்தாலும் உடல் எடை குறைவது உறுதி.

இதை நீங்கள் குடித்து வரும் போது உடலில் கொழுப்பை சேர விடாமல் தடுத்து விடும்.

அதாவது நீங்கள் சாதாரண உணவை சாப்பிட்டு வந்தாலும் கூட எடை கூடாமல் தடை செய்யும்.

இதனை நாமும் கடைபிடிப்போம், இந்த முறையை மற்றவர் அறியவும் செய்வோம்.

வீண் விளம்பரங்களால் கவரப்பட்டு, அதனால் பக்கவிளைவுகளுடன் அவதிப்படும் நமது மக்களை பாதுகாக்க இந்த முறை உதவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments