Wednesday, September 28, 2022
HomeStickerஇருட்டுக்குள் யாழில் இடம்பெற்ற பயங்கரம்!

இருட்டுக்குள் யாழில் இடம்பெற்ற பயங்கரம்!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை நகரில் உள்ள தையல் கடை ஒன்றுக்குள் முக மூடிகளுடன் நுழைந்த கும்பல் ஒன்று கடையை அடித்து நொருக்கியதுடன், உரிமையாளரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

குறித்த சம்பவம் திங்கட்கிழமை இரவு மின்வெட்டு அமுலில் இருந்த சமயம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் ச.பாலகுமார் (வயது44) என்பவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனிப்பட்ட பகை காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை யாழில் கடந்த ஓரிரு நாட்களில் 10 க்கும் ஏற்பட்ட வாள் வெட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments