Wednesday, September 28, 2022
HomeStickerடீசல், பெட்ரோலின் விலையை 70 ரூபாவினால் குறைக்கலாம் - மக்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி செய்தி

டீசல், பெட்ரோலின் விலையை 70 ரூபாவினால் குறைக்கலாம் – மக்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி செய்தி

ஒரு லீட்டர் டீசல் மற்றும் பெட்ரோலின் விலையை 70 ரூபாவினால் குறைக்கலாம் என ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிமுகப்படுத்திய எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் நேற்றிரவு உள்ளூர் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும். எனினும் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என கூறியுள்ளார்.

இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையின் நடப்பு விவகாரங்கள் ஒவ்வொரு நாளும் புதுமையை தந்துகொண்டிருக்கின்றன.

சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலே அரங்கேறி வருகின்றன.

இவை தொடர்பில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம்.

அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை இங்கே மீட்டிக்கொள்ளுங்கள்.

1. இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க – பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

2. அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் படிக்க – அவசரகாலச் சட்டம் தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

3. இலங்கையில் துவிச்சக்கர வண்டிகளின் விற்பனைகள் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக , துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் மற்றும் உதிரிப்பாக விற்பனையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் ரிஸ்னி இஸ்மத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க – இலங்கையில் சடுதியாக வீழ்ச்சி அடைந்த துவிச்சக்கரவண்டி விலை!

4. அனைத்து அரிசி வகைகளின் விலையையும் இன்று முதல் 5 ரூபாவால் குறைக்க நெல் சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி, இந்த விலை குறைப்பு இன்று (16) முதல் அமுலுக்கு வரும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க – அரிசி விலை குறித்து மக்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி செய்தி

5. விலைச்சூத்திரத்தின்படி, எரிபொருளின் விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் படிக்க – எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments