பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவ வீரர்களை தாக்கி காயமேற்படுத்தல், துப்பாக்கிச் சூடு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த ஜூலை 13ஆம் திகதி பொல்துவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றதாக பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 0718 591733, 0712 685151 அல்லது 1997 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.