Sunday, October 1, 2023
HomeStickerபாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

டிசம்பர் மாத ஆரம்பம் வரையில் விடுமுறையின்றி பாடசாலைகளை நடத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், டிசம்பர் மாத ஆரம்பம் வரையில் வாராந்தம் 5 நாட்களும் விடுமுறையின்றி பாடசாலைகளை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நாடு முழுவதும் வாராந்தம் ஐந்து நாட்களும் பாடசாலைகள் நடத்தப்படுகின்றன.

பாடசாலைகளுக்கு போக்குவரத்து காரணங்களால் சமூகமளிக்க முடியாத நிலைமைகள் குறித்த முறைபாடுகள் எவையும் இதுவரையில் கிடைக்கவில்லை.

அவ்வாறான நிலை ஏற்பட்டால் அது குறித்து போக்குவரத்துசபை உள்ளிட்ட தரப்புடன் கலந்துரையாடி அந்த பிரச்சினையைத் தீர்த்து, வாராந்தம் 5 நாட்களும் பாடசாலைகளை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

கொவிட் பரவலுக்கு மத்தியில் பாடசாலைகளை நடத்திச் செல்வது குறித்த எச்சரிக்கை எதனையும் சுகாதார அமைச்சு இதுவரையில் முன்வைக்கவில்லை.

அதற்கான வழிகாட்டிகள் மற்றும் அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சு வழங்கினால் அதன்படி பாடசாலைகள் செயற்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments