உலகில் குறைந்த சராசரி சம்பளம் வாங்கும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கடைசி இடமும் தொடர்ந்து முதலிடத்தில் சுவிஸ்ட்சர்லாந்தும் இடம் பிடித்துள்ளன.
CEOWORLD இதழ் வரிக்குப் பிறகு சராசரி நிகர சம்பளங்களின் பட்டியலை வெளியிட்ட நிலையிலேயே இந்த தர விபரம் தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலில் வெளியான தகவலின்படி , முதல் இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தில் சராசரி மாத நிகர சம்பளம் 6,142.10 அமெரிக்க டொலர்களாகும்.

இதேவேளை அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், சிங்கப்பூர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது, அதன் சராசரி மாத நிகர சம்பளம் 4,350.79 அமெரிக்க டொலர்களாகும்.
சிங்கப்பூரை தொடர்ந்து, அவுஸ்திரேலியா (US$4,218.89), அமெரிக்கா (US$3,721.64) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (US$3,663.27) ஆகியவை முறையே மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளன.
எனினும் இதற்கு நேர்மாறாக, குறைந்த சராசரி மாதாந்த நிகர சம்பளத்துடன் இலங்கை கடைசி இடத்தை பிடித்துள்ளது.
அங்கு சராசரி மாதாந்த நிகர சம்பளம் 143.62 அமெரிக்க டொலர் என்று அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது, இலங்கை பணமதிப்பில் ரூ. 51716.08 ஆகும்.
இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தான் US$163.17 மற்றும் நைஜீரியா US$166.33 குறைந்த சராசரி மாதாந்த நிகர சம்பளத்துடன் அடுத்த இரண்டு இடங்களை பிடித்துள்ளன.