அர்ஜென்டினாவில் ஆரோக்கியமாக பிறந்த பச்சிளம் குழந்தைகளை விஷமருந்து செலுத்திக் கொன்ற விபரீத சைக்கோ தாதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கோர்டோபாவின் நியோனாடல் மகப்பேறு மருத்துவமனையில் பிரசவித்த 5 பச்சிளம் குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.

இதுகுறித்த புகாரின் பேரில் மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் பிரெண்டா அகுரோ உட்பட 9 பேரை போலிஸார் கைது செய்தனர்.
ஏற்கனவே பிரேண்டா மீது 2 குழந்தைகளை கொன்றதாகக் குற்றச்சாட்டு உள்ள நிலையில்,மேலும் 3 குழந்தைகளின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் நிலுவையில் உள்ளன.
இறந்த குழந்தைகளின் உடலில் அதிகப்படியான பொட்டாசியம் காணப்பட்டதால் அதுவே இறப்பிற்கு காரணமாக இருக்கலாம் என்று இந்த வழக்கின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.