பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவுடன் மாவனல்லை Uthuwankanda மலையில் ஏறிய பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் மாணவி பாறையில் இருந்து தவறி 300 அடி குன்றின் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த விரஸ்மி கொடிதுவக்கு என்ற 27 வயதுடைய மாணவியே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தைச் சேர்ந்த குறைந்தது 59 பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வு பணிக்காக மலையில் ஏறியதாகவும் இதன்போது, அவர் தவறி கீழே விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.