இந்தியாவின் புதுச்சேரியில் 61 வயதான நபர் ஒருவர் 28 வயது பெண்ணை திருமணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
புதுச்சேரியை சேர்ந்த முதியவர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். 61 வயதான இவர் தனது உறவினர்களை காண புதுச்சேரிக்கு வந்துள்ளார்.

அப்போது தனது மனைவி இறந்ததால் தனிமையில் வாடுவதாகவும், குடும்ப பொறுப்புகளை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாகவும் புலம்பியுள்ளார்.
அவரது கஷ்டத்தை தீர்க்க எண்ணிய உறவினர்கள் , அப்பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த 28 வயதான இளம் பெண்ணிடம் பேசி முதியவரை திருமணம் செய்ய சம்மதிக்க வைத்துள்ளனர்.
Today, a 75 year young man married 26 years old girl. The girl gets ₹2.5 crores.
Marriage in Puducherry Manakkula Vinayagar Temple.
Women can do anything for money.
The #Golddigger mindset. pic.twitter.com/RyX2WoH25k
— ?? (@Try2StopME) August 30, 2022
இதைத்தொடர்ந்து அண்மையில் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பாக அந்த கோவிலின் அறங்காவல் குழுவினர் தரப்பில் கூறுகையில்,
இருவரின் பெயர், எந்த ஊர் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. அவர்கள் மேஜரா என்பதை மட்டும்தான் நாங்கள் பார்த்தோம். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள எம்எல்ஏ ஒருவரின் சிபாரிசு கடிதமும் பெற்று வந்தனர்.
இதனை ஏற்றுக்கொண்டு நாங்கள் திருமணம் செய்து வைத்தோம். மணப்பெண்ணுக்கு 28 வயதாகின்றது மணமகனுக்கு 61 வயதாகின்றது என கூறியுள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு 2.5 கோடி ரூபாய் முதியவர் தரப்பிலிருந்து வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம் அந்த பெண் முதியவரை திருமணம் செய்து கொண்டு பிரான்ஸ் நாட்டில் செட்டில் ஆகலாம் என்பதற்காக அவரை திருமணம் செய்து கொண்டிருக்கலாம் என நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர்.