2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
115 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 5வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும், 43 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்துள்ளனர்.
திருத்தப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.

கடந்த இரு தினங்களாக வரவு செலவுத் திட்டம் மீதான விவாதங்கள் நடத்தப்பட்டிருந்த நிலையில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.
இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியினர் மற்றும் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட பொதுஜன பெரமுன கட்சியின் 13 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.