Saturday, December 9, 2023
HomeStickerவவுனியா மாணவர்கள் யாழில் சாதனை!

வவுனியா மாணவர்கள் யாழில் சாதனை!

யாழ்ப்பாணம் – கந்தர்மடம் சைவபிரகாச பாடசாலையில் இடம்பெற்றுள்ள பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட பளு தூக்கும் போட்டியில் வவுனியா – நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் பதக்கங்களை வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.


17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 49 kg எடை பிரிவில் நா. நகிந்தன், 82kg தூக்கி தங்கமும் ஜொ. ஜதுர்சன் 55kg எடை பிரிவில் 97kg தூக்கி வெள்ளி பதக்கமும் கி. சுபிஸ்கரன் 59kg எடை பிரிவில் 100kg தூக்கி வெள்ளி பதக்கமும் யோ. சாருஜன் 55kg எடை பிரிவில் 80kg தூக்கி 5ஆம் இடமும் 20வயதுக்குட்படட ஆண்கள் பிரிவில் அ. கோகுலன் 65kg எடை பிரிவில் 125kg பழுவை தூக்கி சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில் தங்க பதக்கம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments