Sunday, October 1, 2023
HomeStickerரணில் தொடர்பில் கோட்டாபய வெளியிட்ட இரகசியம்

ரணில் தொடர்பில் கோட்டாபய வெளியிட்ட இரகசியம்

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டாம் என இந்தியா தன்னிடம் பெரிய கோரிக்கை ஒன்றை விடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள தனது உத்தியோபூர்வ இல்லத்தில் தனக்கு நெருக்கமானவர்களிடம் உரையாடும் போது முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட தகவலை வெளியிட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

“ நான் மாலைதீவில் இருந்த போது இந்தியா ரணிலை ஜனாதிபதி நியமிக்க வேண்டாம் என என்னிடம் பெரிய கோரிக்கையை விடு்த்தது. நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சித் தலைவர்களும் இணங்கியது போல் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை ஜனாதிபதியாக நியமிக்குமாறு இந்தியா என்னிடம் கோரியது.


எனினும் ரணிலை ஜனாதிபதியாக நியமிக்குமாறு எனக்கு பல தரப்பில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.ரணிலை ஜனாதிபதியாக நியமிக்குமாறு எங்களவர்களே என்னிடம் வந்து கூறினர்.

எனக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக நான் ஜனாதிபதி பதவியை ரணிலுக்கு வழங்கினேன். இதன் காரணமாவே இந்தியா என் மீது கோபம் கொண்டிருக்கும் என்று நான் நினைக்கின்றேன்” என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அப்போது பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்து விட்டு நாட்டில் இருந்து வெளியேறினார்.

கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலகிய பின்னர் ரணில் விக்ரமசிங்க தற்காலிக ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டதுடன் அதன் பின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் 134 வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவானார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் அமர்த்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களே அதிகளவில் வாக்குகளை வழங்கி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி தெரிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments