Sunday, October 1, 2023
HomeStickerகணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை - பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொண்ட பெண்

கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை – பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொண்ட பெண்

தமிழகத்தில் குடும்பப் பிரச்சினை காரணமாக பெண்ணொருவர் தனது பிள்ளைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் எஜமான் நகரை சேர்ந்தவர் குமார். லேத் பட்டறை நடத்தி வரும் இவர், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

குமார் வீட்டின் கூடத்திலும், அவரது மனைவி ஷகிராபானு பிள்ளைகளுடன் தனி அறையிலும் தூங்கியுள்ளனர்.

இந்த நிலையில் வெகு நேரமாகியும் அறையின் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த குமார் அறையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, மனைவி மற்றும் பிள்ளைகள் மின்விசிறியில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளனர்.

இதனைக் கண்டு குமார் அதிர்ச்சியில் உறைந்து போனார். அதன் பின்னர் அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்ததைத் தொடர்ந்து பொலிசார் அங்கு விரைந்தனர்.

மூவரின் உடல்களையும் மீட்ட பொலிசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மூன்று மாதங்களாக கணவன், மனைவி இடையே பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக மனமுடைந்த ஷகீரா பானு, தனது மகன் மற்றும் மகளின் மூக்கில் பஞ்சு வைத்து அடைத்து, மின்விசிறியில் தூக்கில் தொங்க விட்டுள்ளார்.

அதன் பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments