Saturday, December 9, 2023
HomeStickerவறுமையிலும் சாதனை படைத்த யாழ் இளைஞன்

வறுமையிலும் சாதனை படைத்த யாழ் இளைஞன்

ஆண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் இலங்கையின்5 ஆண்டுகள் சாதனையை யாழ் இளைஞர் அருந்தவராசா- புவிதரன் முறியடித்துள்ளார்.

தற்போது புவிதரனிடம் (சாவகச்சேரி இந்துக் கல்லூரி முன்னாள் மாணவன்) இருக்கின்ற கோலானது 4.80 அல்லது 4.90 மீட்டர் உயரத்தை தாவுகின்ற அளவைக் கொண்ட கோலாகும்.

எனவே இலங்கை சாதனையை முறியடிக்க அந்த கோலின் உயரம் போதாதது. அதுமாத்திரமின்றி, தற்போதைய சந்தையில் கோலொன்றின் விலை 5 இலட்சம் ரூபாவாக உள்ளதுடன், அதை வாங்குகின்ற வசதியும் புவிதரனுக்கு இல்லை.

எனினும், நேற்றுமுன்தினம் நடைபெற்ற பயிற்சியின் போது இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த கோலூன்றிப் பாய்தல் வீரர் சன்ன பெர்னாண்டோவின் கோலைக் கொண்டு புவிதரன் பயிற்சிகளை மேற்கொண்டார்.


இதனிடையே, நேற்று நடைபெற்ற போட்டியின் போது அவரது கோலைப் பயன்படுத்தி தான் புவிதரன் 5 ஆண்டுகள் பழமையான இலங்கை சாதனையை முறியடித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments