ஈரானில் இளம்பெண் ஹிஜாப் அணியாததால் தாக்கப்பட்டு இறந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் குதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் நாட்டின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள சாகிஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் மாஷா அமினி(22). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது ரோந்து காவலர்கள் அவரிடம் ஏன் சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக் கேட்டு கைது செய்துள்ளனர். அத்துடன் வாகனத்தில் அவரை ஏற்றி கடுமையாக தாக்கியதில் மாஷா மயக்கம் அடைந்துள்ளார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் கோமா நிலைக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கினர்.
These Iranian women took of their hijab to protest against the murdering of #MahsaAmini by hijab police. The woman who took the video says:
We will win against gender apartheid regime because now our anger is bigger than our fear. #مهسا_امینی pic.twitter.com/VIFiIr0mCv— Masih Alinejad ?️ (@AlinejadMasih) September 19, 2022
மேலும் தங்களின் தலைமுடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த விவகாரத்தில் உலகின் பல மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.