Sunday, October 1, 2023
HomeStickerஇடம்மாறும் சனி!! சிலருக்கு எதிர்பாராத ஜாக்பாட் - யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?

இடம்மாறும் சனி!! சிலருக்கு எதிர்பாராத ஜாக்பாட் – யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?

சனிபகவான் 30 ஆண்டுகாலத்திற்குப் பிறகு கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார். இந்த சனி பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறது. அள்ளிக்கொடுக்கப்போகிறார் சனிபகவான். அதே நேரத்தில் சில ராசிக்காரர்களுக்கு கடுமையான சோதனைகளையும் தரப்போகிறார். சனிபகவான் பயணத்தால் யாரெல்லாம் பயணடையப்போகிறார்கள்? யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

சனி பெயர்ச்சி 2023 ஜனவரி 17ஆம் திகதி திருக்கணித பஞ்சாங்கப்படியும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழப்போகிறது. சனிபகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரை சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார்.

சனிபகவான் ஏழரை சனியாக பயணம் செய்யும் ராசிக்காரர்களுக்கும், அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனியாக பயணம் செய்யும் ராசிக்காரர்களுக்கும் சில சோதனைகளையும் படிப்பினைகளையும் தரப்போகிறார். யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.


கடகம்
கண்டக சனியில் இருந்து தப்பிய கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியின் ஆதிக்கம் ஆரம்பிக்கப்போகிறது. கணவன் மனைவி இடையேயான சிக்கல் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கூட்டுத்தொழிலில் கவனம் தேவை. காதலிப்பவர்கள் கவனம். தேவையற்ற தொடர்புகள் ஏற்படும். எதிர்பாலினத்தவர்களிடம் பேசும் போது கவனம் தேவை.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்தாஷ்டம சனி பாதிப்பு ஏற்படுவதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம். வண்டி வாகனம் வாங்கும் போதும் விழிப்புணர்வு அவசியம். எந்த பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு. ஏழரை சனி காலத்தில் சனிபகவான் கொடுத்த சோதனைகளையே தாங்கி விட்டீர்கள் இதிலிருந்து தப்பிக்க முடியாதா? கடவுளை நம்புங்கள் நிச்சயம் கை கொடுப்பார்.

மகரம்
பொதுவாகவே ராசியில் இரண்டாம் இடத்தில் சனி பகவான் அமரும் போது குடும்ப வாழ்க்கையில் சில பாதிப்புகளை ஏற்படுத்தும். மகர ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி முடிந்து பாத சனி ஆரம்பிக்கிறது. பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. சிலருக்கு வாக்கினால் பிரச்சினை உண்டாகும். பண பிரச்சினையில் சிக்க வைக்கும். அதே நேரத்தில் ஏழரை சனியில் பாத சனி என்பதால் பதற்றம், பயத்தை குறைத்து மன நிம்மதியை தருவார்.

கும்பம்
பொதுவாகவே ராசியில் சனிபகவான் ஜென்ம சனியாக அமரும் போது சின்னச் சின்ன பாதிப்புகள் ஏற்படும். ராசியில் அமரும் சனி ஜென்ம சனி உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும். கும்ப ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் பயணிக்கும் போது எச்சரிக்கையும் விழிப்புணர்வும் அவசியம்.

மீனம்
12ஆம் இடம் விரைய ஸ்தானத்தில் சனி அமரும் போதே ஏழரை சனி ஆரம்பிக்கும். தேவையற்ற விரையங்களை கொடுக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். மீன ராசிக்காரர்களுக்கு 2023ஆம் ஆண்டு முதல் ஏழரை ஆரம்பிக்கிறது.
மீன ராசிக்காரர்களுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏழரை சனி ஆரம்பிக்கிறது. தேவையற்ற விரையங்களைத் தருவார் சனிபகவான். சுப விரையமாக மாற்றுங்கள். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். ஏழை எளியவர்களுக்கு தானங்களை கொடுப்பதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். யாருக்காவது அன்னதானம் கொடுப்பது நல்லது.

எதிர்பார்க்காத பண வரவு
கும்ப ராசியில் ஆட்சி பெற்ற சனிபகவான் மேஷ ராசிக்காரர்களுக்கு 11வது வீட்டில் அமர்வது சிறப்பு. நிறைய பண வரவு வரும். செய்யும் தொழிலில் மிகப்பெரிய லாபத்தை தரப்போகிறார். தொழில் தொடங்கலாம். நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கும். மிகப்பெரிய செல்வந்தராக வலம் வருவீர்கள். ரிஷப ராசிக்காரர்களுக்கும் சனிபகவான் அற்புத பலன்களைத் தரப்போகிறார். பொருளாதாரத் தடை விலகும். சனிபகவான் அள்ளிக்கொடுக்கும் காலத்தில் ஆணவமாக நடந்து கொள்ள வேண்டாம்.

திடீர் ஜாக்பாட் யாருக்கு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி விலகுவதால் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். எதிர்பார்க்காத திடீர் ஜாக்பாட் அடிக்கும். இழந்த செல்வம் திரும்ப வரப்போகிறது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சனி பகவான் மிதுன ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரப்போகிறார். கண்டச்சனி, அஷ்டம சனியை கடந்து வந்த மிதுன ராசிக்காரர்களுக்கு வெற்றியைத் தேடித் தரப்போகிறார். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். திடீர் பண வரவும் வரும். துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி விலகி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்வதால் தொழில் வளர்ச்சியடையும் புது வீடு கட்டுவீர்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments