Sunday, May 28, 2023
HomeStickerமீண்டும் களமிறங்கும் இராணுவம்! ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி

மீண்டும் களமிறங்கும் இராணுவம்! ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மீண்டும் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று (செப்டம்பர் 22, 2022) முதல் அமுலுக்கு வரும் வகையில் நாட்டில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மனித உரிமைகள் சட்டத்தரணி அம்பிகா சத்குணநாதன் இது குறித்து சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி மீண்டும் பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 வது பிரிவைப் பயன்படுத்தி ஆயுதப்படைகளை பொது ஒழுங்கை நிலைநிறுத்த அழைப்பு விடுத்துள்ளார்.

நடைமுறைக்கு மாறான அவசர நிலையை பிரகடனப்படுத்த ஜனாதிபதி ஒவ்வொரு மாதமும் வர்த்தமானியை வெளியிட வேண்டும் என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments