Wednesday, September 28, 2022
HomeStickerமின்வெட்டு நேரம் சடுதியாக அதிகரிப்பு

மின்வெட்டு நேரம் சடுதியாக அதிகரிப்பு

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (23) முதல் ஞாயிறு (25) வரை 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

வெஸ்ட்கோஸ்டில் மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பழைய லக்சபான நிலையம் சேவையில் இன்மை ஆகிய காரணங்களால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் பகலில் 1 மணி நேரமும் – இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கடந்த நாட்களில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments