சனி பகவான் 2023ஆம் ஆண்டு திருக்கணிதப்படி ஜனவரி மாதத்திலும் வாக்கிய பஞ்சாங்கப்படி மார்ச் மாதத்திலும் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது ராசியான கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் சிலருடைய வாழ்க்கையே தலைகீழாக மாறக்கூடிய சூழ்நிலை ஏற்படும். யாருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களும், முன்னேற்றமும் என்று விரிவாக பார்க்கலாம்.
சனி பகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகும். சனி பெயர்ச்சி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சனிபகவான் மெதுவாக நகர்ந்து செல்வார். அதனால்தான் சனிபகவானுக்கு மந்தன் என்ற பெயரும் உண்டு.
சனி பகவானுக்கு சில ராசிக்காரர்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுப்பார். சிலருக்கு சோதனைகளை கொடுத்து வலிமைப்படுத்துவார். ஆணவத்தினாலும் அகங்காரத்தினாலும் இருப்பவர்களின் தலையில் குட்டி பாடம் கற்றுக்கொடுப்பார். ஏழரை சனியாக ஆட்டி வைப்பார். அர்த்தாஷ்டம சனியாக சில நேரம் அச்சமூட்டுவார். கண்டச்சனியாக மாறி கவலைப்பட வைப்பார். அஷ்டம சனியாக மாறி பல படிப்பினைகளைப் கொடுப்பார்.

சனி பகவான் தரும் யோகம்
ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் சனி பகவான், துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் அமர்ந்துள்ள நிலையில், அந்த வீடுகள் லக்னம் அல்லது ராசி ஆகியவற்றுக்கு 1,4,7,10 என்ற கேந்திர ஸ்தானங்களாக அமைந்திருந்தால் சச யோகம் ஏற்படுகிறது. கோச்சார ரீதியாக சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்வதால் இந்த முறை கும்பம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சச மகா யோகம் கிடைக்கப்போகிறது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே..தொழில் ஸ்தானமான பத்தாவது வீட்டில் சனிபகவான் ஆட்சி பெற்று அமர்கிறார். பத்துக்கு உரிய அதிபதி பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது யோகமான காலம். கர்ம காரகன் கர்ம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்வதால் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் கிடைக்கும். செய்யும் தொழில் வளர்ச்சியடையும். ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும்.
வெளிநாட்டு யோகம் தேடி வரும்
சனிபகவான் பார்வை உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், நான்காம் வீடு, ஏழாம் வீட்டின் மீது விழுகிறது. குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு திடீர் வெளிநாட்டு யோகம் கை கூடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவியில் புரமோசன் கிடைக்கும். சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். கூட்டுத் தொழில் சிறப்படையும். தடைகளைத் தாண்டி திருமண முயற்சிகள் கை கூடி வரும்.
சிம்மம்
கண்டச்சனி காலம் என்றாலும் இந்த சனி பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்குத் தலைமை பதவி கிடைக்கும். கண்டச்சனியாக இருந்தாலும் யோகம்தான். அரசியல் அரசாங்க துறையில் உள்ளவர்களுக்கு யோகம். தலைமைப்பதவி தேடி வரும் தொழில் அற்புதமாக இருக்கும். கடல் வழி தொழில் செய்பவர்களுக்கு நன்மை செய்வார். வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.
திருமணம் நடைபெறும்
சனியின் பார்வை சிம்ம ராசியின் மீது விழுகிறது. ஏழாம் வீட்டிற்கு உடையவன் ஆட்சி பெற்று அமர்ந்து பார்வையிடுவதால் தடைகளைத் தாண்டி திருமணம் நடைபெறும். தேவையில்லாத பேச்சுக்களை பேச வேண்டாம் ஒன்பதாம் வீட்டின் மீது சனி பார்வை விழுவதால் ஆரோக்கியத்தில் கவனம், தேவை. கடன் வாங்கி வீடு வாங்குவீர்கள். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். கணவன் மனைவி உறவில் கவனமாக இருக்கவும். உடல் நலனில் அக்கறை தேவை. பயணங்களிலும் கவனம் தேவை.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்கு நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அர்த்தாஷ்டம சனியாக அமர்கிறார். தனவரவு அதிகரிக்கும். சுகமான இடத்தில் சனி ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் சந்தோசங்கள் அதிகம் நடைபெறும் காலம் கல்வி திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். திருமணம் முடிந்த தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.
சனி தரும் யோகங்கள்
சனியின் பார்வை 6ஆம் வீட்டில் விழுவதால் தொல்லைகள் விலகும். சனிபகவானின் பார்வை உங்களுடைய ராசியின் மீது விழுகிறது. தொழில் வியாபாரத்தில் பெரிய மாற்றம் ஏற்படும். வெளிநாடு பயணம் செய்வீர்கள். உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்தின் மீது சனியின் பார்வை விழுகிறது தொழில் தொடங்காதவர்கள் கூட தொழில் தொடங்குவீர்கள். பயணங்களால் தன வரவும் கிடைக்கும். ஆட்சி பெற்ற சனியால் பலமடைவீர்கள். அதே நேரத்தில் செலவுகள் அதிகமாகும். திருமணம், குழந்தை பாக்கியத்திற்கு நன்மையான காலம். சொத்துக்கள் வாங்கலாம். சனி பார்வை உங்க ராசி மீது விழுவதால் நிம்மதியும் நம்பிக்கையும் கொடுப்பார்.